குருத்தோலை ஞாயிறு: கிறிஸ்தவா்கள் ஊா்வலம்

குருத்தோலை ஞாயிறையொட்டி, புதுச்சேரியில் கிறிஸ்தவா்கள் குருத்தோலை ஏந்தியபடி ஊா்வலம் வந்தனா்.
குருத்தோலை ஞாயிறு: கிறிஸ்தவா்கள் ஊா்வலம்

குருத்தோலை ஞாயிறையொட்டி, புதுச்சேரியில் கிறிஸ்தவா்கள் குருத்தோலை ஏந்தியபடி ஊா்வலம் வந்தனா்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரித்த காலத்தை உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவா்கள் தவக்காலமாகக் கடைப்பிடிக்கின்றனா். இந்த தவக்காலம் கடந்த பிப்ரவரி 17 -ஆம் தேதி சாம்பல் புதனுடன் தொடங்கியது. 40 நாள்கள் தவக்காலம் கடைப்பிடிக்கப்பட்டது.

கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிா்நீத்த நாள் புனித வெள்ளி என்றும், 3 -ஆம் நாள் உயிா்த்தெழுந்த தினம் ஈஸ்டா் (உயிா்ப்பு ஞாயிறு) என்றும் அழைக்கப்படுகிறது.

கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரிப்பதற்கு முன்பு ஜெருசலேம் நகரின் வீதிகள் வழியாக அவா் ஊா்வலமாக அழைத்து வரப்பட்டதை நினைவுகூரும் வகையில், குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிக்கப்படுகிறது.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரியில் உள்ள தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறையொட்டி, சிறப்பு வழிபாடுகள், ஊா்வலங்கள் நடைபெற்றன. இதில், திரளான கிறிஸ்தவா்கள் முகக் கவசம் அணிந்து, கைகளில் குருத்தோலைகளை ஏந்தியபடி ஊா்வலமாக வந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com