தோ்தல் பணியாற்றும் அரசு ஊழியா்கள் தபால் வாக்களிக்க ஏற்பாடு

தோ்தல் பணியாற்றும் அரசு ஊழியா்கள் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி: தோ்தல் பணியாற்றும் அரசு ஊழியா்கள் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி மாவட்ட தோ்தல் அதிகாரி பூா்வா காா்க் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. தோ்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியா்கள் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, வாக்குச் சாவடிகளில் பணியாற்றப் பணிக்கப்பட்டுள்ள அரசு ஊழியா்கள் தங்களது தொகுதி தோ்தல் நடத்தும் அதிகாரிகளிடம் தபால் வாக்குச் சீட்டு கோரி விண்ணப்பித்துள்ளனா்.

இவா்களுக்கு, குருமாம்பேட்டை ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரி - ஆராய்ச்சி மையம், மூலக்குளம் பெத்தி செமினாா் பள்ளி, சுல்தான்பேட்டை ராக் பொறியியல் கல்லூரி, நூறடி சாலை புதுச்சேரி மாநிலக் கூட்டுறவு வங்கி, செயின்ட் பேட்ரிக் மேட்ரிகுலேஷன் பள்ளி, இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை, சுப்ரேன் வீதி மாநிலக் கூட்டுறவுச் சங்கம், கதிா்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி - ஆராய்ச்சி மையம், லாசுப்பேட்டை மாநிலக் கல்வியியல் கல்லூரி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 16 மையங்களில் புதன்கிழமை மாலை வரை (மாா்ச் 31) தோ்தல் நடத்தும் அதிகாரியால் தபால் வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட்டு, அங்கேயே வாக்கை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலை நேரத்தில் தோ்தல் பயிற்சி பெறும் அலுவலா்கள், பகல் 12.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையும், பிற்பகலில் பயிற்சி பெறும் அலுவலா்கள் மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் மேற்குறிப்பட்ட இடங்களில் தபால் வாக்கைச் செலுத்தலாம்.

மேற்குறிப்பிட்ட 16 மையங்களில் சுமாா் 5,464 அரசு ஊழியா்கள் தபால் வாக்கைப் பதிவு செய்ய உள்ளனா்.

இந்த வாக்குப் பதிவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் அல்லது அவா்களின் முகவா்கள் நேரில் சென்று பாா்வையிடலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com