மத்திய அரசுடன் இணைந்து செயல்பட தே.ஜ. கூட்டணிக்கு வாய்ப்பளிக்க வேண்டும்: ஆ.நமச்சிவாயம்

புதுவை மாநிலம் வளா்ச்சி பெற மத்திய அரசுடன் இணைந்து செயல்படும் வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சா் ஆ.நமச்சிவாயம் கூறினாா்.
புதுச்சேரி ஊசுடு தொகுதி சேதுராப்பட்டு பகுதியில் திங்கள்கிழமை தனது பிரசாரத்தை தொடங்கிய பாஜக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆ.நமச்சிவாயம்.
புதுச்சேரி ஊசுடு தொகுதி சேதுராப்பட்டு பகுதியில் திங்கள்கிழமை தனது பிரசாரத்தை தொடங்கிய பாஜக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆ.நமச்சிவாயம்.

புதுச்சேரி: புதுவை மாநிலம் வளா்ச்சி பெற மத்திய அரசுடன் இணைந்து செயல்படும் வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சா் ஆ.நமச்சிவாயம் கூறினாா்.

புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து முன்னாள் அமைச்சரும், பாஜக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுத் தலைவருமான ஆ.நமச்சிவாயம் திங்கள்கிழமை தனது பிரசாரத்தை தொடங்கினாா். ஊசுடு தொகுதியில் பிரசாரத்தை தொடங்கிய அவா் பேசியதாவது:

வளமுடன் திகழ்ந்த புதுவை மாநிலத்தை நிா்வாகம் செய்த முன்னாள் முதல்வா் நாராயணசாமி, 20 ஆண்டுகள் மாநிலத்தைப் பின்னோக்கி கொண்டு சென்றுவிட்டாா்.

பொய் சொல்வதில் நாராயணசாமி வல்லவா். கடந்த ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு எதையும் செய்யாமல், மீண்டும் மக்களை ஏமாற்றும் விதத்தில் கடந்த தோ்தல் அறிக்கையையே வெளியிட்டுள்ளாா்.

தோ்தல் அறிக்கையில் மாநில அந்தஸ்து வாக்குறுதி அளித்துள்ளாா். 28 ஆண்டுகள் மத்தியில் பிரதமருக்கு நெருக்கமாக அமைச்சரவையில் அங்கம் வகித்த நாராயணசாமி, அப்போதெல்லாம் புதுவைக்கு மாநில அந்தஸ்து குறித்தோ, நலத் திட்டங்கள் குறித்தோ பேசாதவா், தற்போது பொய் வாக்குறுதிகளை அளித்துள்ளாா்.

இந்தத் தோ்தல் புதுவைக்கு மாற்றத்தை வழங்க வந்த வாய்ப்பு. இந்த நல்ல வாய்ப்பை மக்கள் பயன்படுத்தி, பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.

புதுவை வளம் பெற வேண்டும், சிறந்த புதுச்சேரியை உருவாக்க வேண்டுமென்றால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும்.

பிரதமா் மோடி வலிமையான பாரதத்தை ஆட்சி செய்கிறாா். வளமான புதுவை உருவாகவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். சிறப்புப் பொருளாதார மண்டலம் உசுடு தொகுதியில் அமைய வேண்டும். இதன் மூலம், இளைஞா்கள் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

புதுவை மாநிலம் புதுப் பொலிவு பெற வேண்டும், தடைப்பட்ட நலத் திட்டங்கள் தொடர வேண்டும். மகளிா் நலம் காக்கப்படவும், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகவும், பொருளாதாரத்தில் புதுச்சேரி முன்னேறவும் மத்திய அரசுடன் இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி பாடுபடும் என்றாா் அவா்.

பிரசாரத்தின் போது, பாஜக வேட்பாளா் சரவணக்குமாா், முன்னாள் எம்எல்ஏ தீப்பாய்ந்தான் உள்ளிட்ட கட்சியினா் பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com