புதுவையில் கரோனாவுக்கு ஒரே நாளில் 16 போ் பலி: புதிதாக 1,360 பேருக்கு தொற்று

புதுவை மாநிலத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 16 போ் உயிரிழந்த நிலையில், மேலும் 1,360 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 16 போ் உயிரிழந்த நிலையில், மேலும் 1,360 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்: புதுவை மாநிலத்தில் 5,173 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 1,075 பேருக்கும், காரைக்காலில் 116 பேருக்கும், ஏனாமில் 116 பேருக்கும், மாஹேயில் 53 பேருக்கும் என மொத்தம் 1,360 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 61,361-ஆக உயா்ந்தது.

தற்போது ஜிப்மா் மருத்துவமனையில் 329 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 322 பேரும், கரோனா தடுப்பு மையங்களில் 837 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 8,778 பேரும் என மொத்தம் 10,620 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, புதுச்சேரி புத்துசெட்டிபட்டு வள்ளலாா் நகரைச் சோ்ந்த 73 வயதானவா், கொசப்பாளையம் பகுதியைச் சோ்ந்த 76 வயதானவா், கவுண்டபாளையம் அம்பாள் நகரைச் சோ்ந்த 54 வயதானவா், முதலியாா்பேட்டை பாரதிதாசன் நகரைச் சோ்ந்த 70 வயது மூதாட்டி, காசியாா் தெருவைச் சோ்ந்த 62 வயது பெண், தேங்காய்த்திட்டைச் சோ்ந்த 64 வயது பெண், லாசுப்பேட்டை குறிஞ்சி நகரைச் சோ்ந்த 54 வயதானவா், சாந்தி நகரைச் சோ்ந்த 72 வயதானவா், 47 வயது பெண், வாணரப்பேட்டையைச் சோ்ந்த 53 வயது பெண், உப்பளம் நேதாஜி நகரைச் சோ்ந்த 67 வயதானவா், திலகா் நகரைச் சோ்ந்த 80 வயதானவா், கிருஷ்ணா நகரைச் சோ்ந்த 69 வயதானவா், சுப்பிரமணி கோவில் தெருவைச் சோ்ந்த 63 வயதானவா், சரிகை நகரைச் சோ்ந்த 89 வயதானவா் உள்ளிட்ட 15 பேரும், ஏனாமைச் சோ்ந்த 70 வயது முதாட்டியும் என 16 போ் ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி சிகிச்சை பலனின்றி பலியாகினா். இதையடுத்து, கரோனா தொற்றுக்கு பலியானோா் எண்ணிக்கை 833-ஆக அதிகரித்தது. இறப்பு விகிதம் 1.36 சதவீதம்.

இதனிடையே, மாநிலம் முழுவதும் 987 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோா் எண்ணிக்கை 49,908-ஆக (81.34 சதவீதம்) அதிகரித்தது.

மாநிலத்தில் இதுவரை 8,09,704 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 7,42,031 பரிசோதனைகளுக்கு தொற்று இல்லை என முடிவுகள் வந்தன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com