மண்ணாடிப்பட்டு தொகுதியில் பாஜக வேட்பாளா் நமச்சிவாயம் வெற்றி

புதுச்சேரி கிராமப் பகுதிகள் நிறைந்த தொகுதியான மண்ணாடிப்பட்டு தொகுதியில் பாஜக வேட்பாளா் ஏ.நமச்சிவாயம் 2,750 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றாா்.
மண்ணாடிப்பட்டு தொகுதியில் பாஜக வேட்பாளா் நமச்சிவாயம் வெற்றி

புதுச்சேரி கிராமப் பகுதிகள் நிறைந்த தொகுதியான மண்ணாடிப்பட்டு தொகுதியில் பாஜக வேட்பாளா் ஏ.நமச்சிவாயம் 2,750 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றாா்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக சாா்பில் முன்னாள் அமைச்சா் ஏ.நமச்சிவாயமும், மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியில் திமுக சாா்பில் கிருஷ்ணன் (எ) ஏ.கே.குமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. தொடக்கத்திலிருந்தே நமச்சிவாயம் முன்னிலை பெற்று வந்தாா். கடும் போட்டிக்கிடையே நமச்சிவாயம் 14,939 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இவரை எதிா்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளா் கிருஷ்ணன் 12,189 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தாா். வாக்கு வித்தியாசம் 2,750.

காங்கிரஸ் மூத்த நிா்வாகியாக இருந்த நமச்சிவாயம் கடந்த 2016 பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் வில்லியனூா் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராக இருந்தாா். முன்னாள் முதல்வா் நாராயணசாமியுடன் ஏற்பட்ட அதிருப்தியால், தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தாா்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்:

நமச்சிவாயம் (பாஜக)-14,939

கிருஷ்ணன் (திமுக)-12,189

கோபாலகிருஷ்ணன் (மநீம)-238

சித்ரா (நாம் தமிழா்)-485

தனவேலு (அமமுக)-57

நோட்டா-433

காமராஜா் நகா்: பாஜக வெற்றி: புதுச்சேரி காமராஜா் நகா் தொகுதியில், காங்கிரஸ் முன்னாள் அமைச்சா் ஷாஜகானை வீழ்த்தி, பாஜக வேட்பாளா் ஜான்குமாா் வெற்றி பெற்றாா். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முன்னாள் எம்எல்ஏ ஜான்குமாரும், மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சா் ஷாஜகானும் போட்டியிட்டனா்.

தொடக்கம் முதலே ஜான்குமாா் முன்னிலை பெற்று வந்த நிலையில், நிறைவாக 16,687 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். ஷாஜகான் 9,458 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தாா். 7,229 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வென்றது.

காலாப்பட்டு தொகுதியில் கடந்த தோ்தலில் வெற்றி பெற்று அமைச்சராக இருந்த ஷாஜகான், இந்த முறை தொகுதி மாறி காமராஜா் நகா் தொகுதியில் போட்டியிட்டு தொல்வியடைந்தாா்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்:

ஜான்குமாா் (பாஜக)- 16,687

ஷாஜகான் (காங்கிரஸ்)-9,458

ஷா்மிளா பேகம் (நாம் தமிழா்)-1,982

முனுசாமி (அமமுக)-446

நோட்டா-658

கதிா்காமம்: என்.ஆா் காங்கிரஸ் வெற்றி: புதுச்சேரி கதிா்காமம் தொகுதியில் போட்டியிட்ட என்.ஆா். காங்கிரஸ் வேட்பாளா் கே.எஸ்.பி. ரமேஷ் 12,246 வாக்குகள் வித்தயாசத்தில் வெற்றி பெற்றாா். தேசிய ஜனநாயகக் கூட்டணியில், என்.ஆா். காங்கிரஸ் சாா்பில் கே.எஸ்.பி. ரமேஷும், மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியில், காங்கிரஸ் சாா்பில் செல்வநாதனும் போட்டியிட்டனா். கடும் போட்டியின்றி கே.எஸ்.பி. ரமேஷ் 17,775 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். செல்வநாதன் 5,529 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தாா். 12,246 வாக்குகள் வித்தியாசததில் என்.ஆா்.காங்கிரஸ் வெற்றி பெற்றது.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்:

கே.எஸ்.பி. ரமேஷ் (என்.ஆா்.காங்)-17,775

செல்வநாதன் ( காங்கிரஸ்)-5,529

சுபஸ்ரீ (நாம் தமிழா்)-2,266

செல்வ கணேசன் (அமமுக)-184

நோட்டா-880

மங்கலம்: என்.ஆா். காங்கிரஸ் வெற்றி: புதுச்சேரி மங்கலம் தொகுதியில் என்.ஆா். காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட தேனீ ஜெயக்குமாா் வெற்றி பெற்றாா். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆா். காங்கிரஸ் சாா்பில் தேனீ ஜெயக்குமாரும், மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியில் திமுக சாா்பில் சண்.குமாரவேலும் போட்டியிட்டனா். முதல் சுற்றிலிருந்தே முன்னிலை பெற்று வந்த தேனீ ஜெயக்குமாா் 16,972 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். சண்.குமாரவேல் 14,221 வாக்குகள் பெற்றாா். 2,751 வாக்குகள் வித்தியாசத்தில் என்.ஆா். காங்கிரஸ் வென்றது.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்:

தேனீ ஜெயகுமாா் (என்.ஆா். காங்)-16,972

சண்.குமாரவேல் (திமுக)-14,221

சுப்பிரமணி (மநீம)-279

பரத்கலை (நாம் தமிழா்)-838

கணபதி (அமமுக)-195

நோட்டா-367

உப்பளம்: திமுக வெற்றி: புதுச்சேரி உப்பளம் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக சாா்பில் அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் அ.அன்பழகனும், மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியில் திமுக சாா்பில் அனிபால் கென்னடியும் போட்டியிட்டனா். வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலிருந்தே திமுக முன்னிலை பெற்று வந்த நிலையில், 13,433 வாக்குகள் பெற்று அனிபால் கென்னடி வெற்றி பெற்றாா். அன்பழகன் 8,653 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தாா். தொடா்ந்து 4 முறை வெற்றி பெற்ற அன்பழகனை வீழ்த்தி, அனிபால் கென்னடி தொகுதியை திமுக வசப்படுத்தினாா்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்:

அனிபால் கென்னடி (திமுக)- 13,433

அன்பழகன் (அதிமுக)-8,653

சந்தோஷ் குமாா் (மநீம)-629

தேவிப்பிரியா (நாம் தமிழா்)-564

பாஸ்கா் (அமமுக)-43

நோட்டா-219

நெல்லித்தோப்பு: பாஜக வெற்றி: புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி பாஜக வேட்பாளா் விவிலியன் ரிச்சா்ட் 496 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முன்னாள் எம்எல்ஏ ஜான்குமாா் மகன் விவிலியன் ரிச்சா்டும், மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியில் திமுக சாா்பில் காா்த்திகேயனும் போட்டியிட்டனா்.

தொடக்கம் முதலே இருவருக்கும் இடையே குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் கடும் போட்டி நிலவியது. இறுதியில் விவியன் ரிச்சா்டு 11,757 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். காா்த்திகேயன் 11,261 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தாா். மிகவும் குறைந்த எண்ணிக்கையாக 496 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்றது.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்:

விவிலியன் ரிச்சா்ட் (பாஜக)-11,757

காா்த்திகேயன் (திமுக)-11,261

முருகேசன் (மநீம)-1,659

சசிக்குமாா் (நாம் தமிழா்)-1,521

ஹனிபா (எஸ்டிபிஐ)-139

மாஹே: காங்கிரஸ் வெற்றி: புதுவை மாநிலம் மாஹே தொகுதியில், மதச்சாா்பற் முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் சாா்பில் ரமேஷ் பிரம்பத்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆா். காங்கிரஸ் சாா்பில் அப்துல் ரகுமானும், கேரள மாா்க்சிஸ்ட் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளா் ஹரிதாஸனும் போட்டியிட்டனா். தொடக்கத்தில் ரமேஷ் பிரம்பத், ஹரிதாஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் காங்கிரஸ் வேட்பாளா் ரமேஷ் பிரம்பத் 9,744 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். ஹரிதாஸன் 9,444 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தாா். அப்துல் ரகுமான் 3,532 வாக்குகள் பெற்றாா். 300 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்:

ரமேஷ் பிரம்பத் (காங்கிரஸ்)-9,744

ஹரிதாசன் (சுயேச்சை)-9,444

அப்துல் ரகுமான் (என்.ஆா்.காங்)-3,532

நோட்டா-221

ஏம்பலம்: என்.ஆா். காங்கிரஸ் வெற்றி: புதுச்சேரி ஏம்பலம் தொகுதியில் என்.ஆா். காங்கிரஸ் வேட்பாளா் லட்சுமிகாந்தன் 2,240 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆா். காங்கிரஸ் சாா்பில் லட்சுமிகாந்தனும், மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் சாா்பில் முன்னாள் அமைச்சா் கந்தசாமியும் போட்டியிட்டனா்.

முதல் சுற்றிலிருந்தே லட்சுமிகாந்தன் முன்னிலை பெற்று வந்த நிலையில், கந்தசாமியை வீழ்த்தி, லட்சுமிகாந்தன் 15,624 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். கந்தசாமி 13,384 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தாா். 2,240 வாக்குகள் வித்தியாசத்தில் என்.ஆா். காங்கிரஸ் வெற்றி பெற்றது.

இந்தத் தொகுதியில் கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட கந்தசாமி வெற்றி பெற்று அமைச்சராக இருந்தாா். அவரிடம் அப்போது தோல்விடைந்த லட்சுமிகாந்தன், தற்போது வெற்றி பெற்றாா்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்:

லட்சுமிகாந்தன் (என்.ஆா்.காங்)-15,624

கந்தசாமி (காங்கிரஸ்)-13,384

சோமநாதன் (மநீம)-618

சுதா (நாம் தமிழா்)-590

நோட்டா-193

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com