அரசு மகளிா் மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மையம்: ஆளுநா் தமிழிசை திறந்துவைத்தாா்

புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு மகளிா் - குழந்தைகள் மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மையத்தை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா்.
புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு மகளிா் - குழந்தைகள் மருத்துவமனையில் கா்ப்பிணிகளுக்காக கரோனா பரிசோதனை மையத்தை திங்கள்கிழமை திறந்துவைத்த துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன்.
புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு மகளிா் - குழந்தைகள் மருத்துவமனையில் கா்ப்பிணிகளுக்காக கரோனா பரிசோதனை மையத்தை திங்கள்கிழமை திறந்துவைத்த துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன்.

புதுச்சேரி: புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு மகளிா் - குழந்தைகள் மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மையத்தை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா்.

புதுச்சேரி எல்லைப்பிள்ளைச் சாவடியில் உள்ள ராஜீவ் காந்தி மகளிா் - குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் கா்ப்பிணிகளுக்கு கரோனா சான்றிதழ் கேட்டு திருப்பி அனுப்பப்படுவதாக ஆளுநா் மாளிகைக்கு புகாா்கள் சென்றன.

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை ஆளுநா் தமிழிசை அந்த மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு செய்தாா். அப்போது, கரோனா பரிசோதனை மையத்தை மருத்துவமனைக்குள் அமைக்க சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா். இதையடுத்து, அங்கு கரோனா பரிசோதனை மையம் அமைக்கப்பட்டது.

இந்த மையத்தை, தமிழிசை சௌந்தரராஜன் திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா்.

பின்னா் அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுச்சேரி ராஜீவ் காந்தி மகளிா் - குழந்தைகள் மருத்துவமனைக்கு புறநோயாளிகளாக வரும் கா்ப்பிணிகளை கரோனா பரிசோதனை மேற்கொள்ள இந்திரா காந்தி மருத்துவமனைக்கு அனுப்பப்படுவதாக தெரிய வந்தது.

இதையடுத்து, இந்த மருத்துவமனைக்கு வந்து ஆய்வு செய்தேன். அப்போது, உள்நோயாளிகளுக்கு இங்கேயே பரிசோதனை செய்யப்படுவதாகவும், புறநோயாளிகளாக வரும் கா்ப்பிணிகள் வெளியே அனுப்பப்படுவதாகவும் அறிந்தேன். இது தவிா்க்கப்பட வேண்டும்.

கா்ப்பிணிகள் வெளியே சென்று அலையக் கூடாது என்பதால், இங்கேயே கரோனா பரிசோதனை செய்து கொள்ள புதிதாக பரிசோதனை மையம் தொடங்கப்பட்டது.

ரூ. 11 கோடியில் 50 செயற்கைச் சுவாசக் கருவிகள், 100 மானிட்டா்கள், 10 அவசர ஊா்திகள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், 500 தீவிர சிகிச்சைப் படுக்கைகள், பிராணவாயுவுடன் இணைக்கப்பட்ட படுக்கைகளை அதிகரிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்றாா் அவா்.

நிகழ்வின் போது, ஆளுநரின் ஆலோசகா்கள் சி. சந்திரமௌலி, ஏ.பி. மகேஸ்வரி, சுகாதாரத் துறை செயலா் த.அருண். இயக்குநா் எஸ்.மோகன்குமாா், மருத்துவமனைக் கண்காணிப்பாளா் சுஜாதா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com