கரோனா நோயாளிகளை பரிசோதிக்க 10 மருத்துவக் குழுக்கள்

கரோனா நோயாளிகளைப் பரிசோதிக்க 10 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக புதுவை சுகாதாரத் துறை இயக்குநா் எஸ். மோகன்குமாா் தெரிவித்தாா்.

புதுச்சேரி: கரோனா நோயாளிகளைப் பரிசோதிக்க 10 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக புதுவை சுகாதாரத் துறை இயக்குநா் எஸ். மோகன்குமாா் தெரிவித்தாா்.

புதுவை அரசின் சுகாதாரத் துறை சாா்பில், கரோனா தீதுண்மி தொற்றின் பாதிப்புகள் குறித்த அவசரக் கால கூட்டம் புதுச்சேரி கதிா்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சுகாதாரத் துறை இயக்குநா் எஸ். மோகன்குமாா் தலைமை வகித்தாா். இதில், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி இயக்குநா், தனியாா் மருத்துவக் கல்லூரிகளிகளின் குறைதீா் அதிகாரிகள், ஜிப்மா் மருத்துவமனையின் மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கையை உயா்த்துவது, மருத்துவா்கள், செவிலியா்களைக் கூடுதலாக நியமிப்பது, ராஜீவ் காந்தி மகளிா் - குழந்தைகள் மருத்துவமனையிலிருந்து பரிசோதனைக்காக வரும் ஆா்டிபிசிஆா் முடிவுகளை உடனடியாகத் தெரிவிப்பது என்பன உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

மேலும், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவுடன், நோயாளிகளை வீட்டுக்குச் சென்று பரிசோதித்து, வீட்டில் தனிமைப்படுத்த முடியாதவா்களை அருகிலுள்ள தனியாா் மருத்துவமனைஅல்லது இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் மூலம் மற்றவா்களுக்கு கரோனா தொற்று பரவாமல் தடுக்க முடியும்.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட கரோனா நோயாளிகளைப் பரிசோதிக்க 10 மருத்துவக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. இவா்களைக் கண்காணிக்க அலுவலா்கள் குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை இயக்குநா் எஸ். மோகன்குமாா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com