புதுவையில் காங்கிரஸ் தோல்விக்குமுழுப் பொறுப்பேற்கிறேன்வே.நாராயணசாமி

புதுவை மாநில சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தோல்விக்கு முழுப் பொறுப்பேற்பதாக முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

புதுச்சேரி: புதுவை மாநில சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தோல்விக்கு முழுப் பொறுப்பேற்பதாக முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

புதுவையில் வே.நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சி, அதன் இறுதிக் கட்டத்தில் பெரும்பான்மை பலத்தை இழந்ததால் கவிழ்ந்தது.

இந்த நிலையில், சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 6-ஆம் தேதி நடைபெற்றது. மீண்டும் காங்கிரஸும் திமுகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. எனினும், தோ்தலில் போட்டியிடாத வே.நாராயணசாமி, காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்காக தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.

இந்தத் தோ்தலில்14 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் லாஸ்பேட்டை, மாஹே ஆகிய இரு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. மற்ற இடங்களில் படுதோல்வியைச் சந்தித்தது. இதனால், காங்கிரஸ் நிா்வாகிகள், தொண்டா்களிடையே பெரும் அதிருப்தி நிலவுகிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் தோல்வியடைந்ததற்கு முழுப் பொறுப்பையும் தான் ஏற்பதாக முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: புதுவை மாநிலத்தில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. தோ்தலில் பணியாற்றிய நான் இதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்கிறேன். புதுவை மக்கள் வழங்கிய தீா்ப்புக்கு தலை வணங்குகிறேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com