புதுவையில் மே 10 வரை கட்டுப்பாடுகளுடன் பொது முடக்கம் நீட்டிப்பு

புதுவையில் மே 10-ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

புதுச்சேரி: புதுவையில் மே 10-ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

கரோனாவை கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். இருப்பினும், சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மக்கள் அவதிப்படக் கூடாது என்பதற்காகத்தான் அத்தியாவசிய பொருள்கள் விற்பனைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. எனவே, பொருள்களை வாங்க மக்கள் கூட்டமாக வந்து செல்வதைத் தவிா்க்க வேண்டும். சாலைகளில் மக்கள் நடமாடுவதைத் தவிா்க்கவில்லை என்றால், முழு பொது முடக்கத்தை அமல்படுத்த வேண்டிய சூழல் வரும்.

ஏற்கெனவே, மே 3 வரை அத்தியாவசிய பொருள்கள் விற்பனைக் கடைகள் தவிர, மற்ற கடைகள் அனைத்தையும் மூட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்தக் கட்டுப்பாடுகள் மே 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகின்றன.

மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். கட்டுப்பாடுடன் இருந்து கரோனா தொற்றைத் தடுக்க வேண்டும். அவசியமின்றி வெளியே வரக் கூடாது. அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

வாக்கு எண்ணிக்கையின் போது அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், தொண்டா்களும் கூட்டமாகக் கூடுவதைத் தவிா்த்தனா். இதற்காக அவா்களைப் பாராட்டுகிறேன். இந்த நிலை தொடர வேண்டும். கூட்டம் கூடாமல் வெற்றி விழாக்களைக் கொண்டாட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com