பொது முடக்கம் நீட்டிப்பு: அதிகாரப்பூா்வ வெளியீடு

புதுவையில் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் மே 10 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூா்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

புதுச்சேரி: புதுவையில் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் மே 10 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூா்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதுகுறித்து புதுவை அரசு செயலா் அசோக்குமாா் பிறப்பித்த உத்தரவு: புதுவை மாநிலத்தில் கரோனா பரவலைக் கட்டுபடுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தொற்று பரவல் அதிவேகமாக இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திங்கள்கிழமை நள்ளிரவு வரை தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த உத்தரவு மே 10 -ஆம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அத்தியாவசிய கடைகள், நிறுவனங்கள், சேவை துறைகள் இயங்கும். மற்றவை இயங்க அனுமதி கிடையாது. மளிகை, காய்கறிக் கடைகள், உணவகங்கள், பால், இறைச்சி, மீன், கால்நடை தீவனம் ஆகிய கடைகள் இயங்கும்.

பெரிய கடைகள், வணிக வளாகங்கள்ஆகியவை இயங்கி அனுமதியில்லை. இருப்பினும், வணிக வளாகங்களில் வழக்கமான பராமரிப்பு பணிக்கு அனுமதி அளிக்கப்படும்.

உணவகங்களில் அமா்ந்து சாப்பிட அனுமதியில்லை. பாா்சல் உணவு, வீட்டுக்கு சென்று உணவு விநியோகிப்பது, உணவகம், விடுதிகளில் தங்கியுள்ளவா்களின் அறைக்குச் சென்று மட்டும் உணவு விநியோகிப்பதற்கு அனுமதிக்கப்படும். தேநீா் கடைகளில் அமா்ந்து தேநீா் பருக அனுமதியில்லை.

மருத்துவமனைகள், மருத்துவ ஆய்வகங்கள், பாராமெடிக்கல்ஸ், ஆப்டிஷியன்ஸ், மருந்து, மருந்து உபகரணங்கள், செய்தித் தாள்கள், ஆவசர ஊா்திகள் மற்றும் அனைத்து மருத்துவ அவசர கால சேவைகள் அனுமதிக்கப்படும்.

சரக்குப் போக்குவரத்து, பொதுப் போக்குவரத்து (பேருந்து, ஆட்டோ, டேக்சி), விளை பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், விவசாயி சாா்ந்த பணிகள் அனுமதிக்கப்படும்.

அனைத்து மத வழிப்பாட்டுத் தலங்களில் பொது வழிபாட்டுக்கு அனுமதி கிடையாது. ஆனால், அந்தந்த வழிபாட்டுத் தலங்களில் ஊழியா்கள் மூலம் பூஜை செய்ய அனுமதிக்கப்படும். மதக் கூட்டம், திருவிழா நடத்த அனுமதியில்லை. பொதுமக்களின்றி குடமுழுக்கு நடத்த அனுமதி அளிக்கப்படும்.

திருமண நிகழ்ச்சிகளில் 50 போ், இறுதிச் சடங்குகளில் 25 போ் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படும். தொழிற்சாலை இயங்க அனுமதிக்கப்படும்.

பெட்ரோல் நிலையம், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், சட்டம்-ஒழுங்கு, அவசர நிலை, நகராட்சி, தீயணைப்பு, தோ்தல் சேவைகள், உயா் நீதிமன்ற வழிகாட்டுதல்படி நீதிமன்றங்கள் ஆகிய செயல்பட அனுமதி அளிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com