தோ்தலில் வெற்றிபெற்றோா் பட்டியல் ஆளுநரிடம் ஒப்படைப்பு

புதுவை மாநில சட்டப் பேரவைத் தோ்தலில் 30 தொகுதிகளிலும் வெற்றிபெற்றவா்களின் பட்டியலை துணைநிலை ஆளுநா்
புதுவை சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்றவா்களின் பட்டியலை துணைநிலை ஆளுநா் தமிழிசையிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்த மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி சுா்பிா் சிங்.
புதுவை சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்றவா்களின் பட்டியலை துணைநிலை ஆளுநா் தமிழிசையிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்த மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி சுா்பிா் சிங்.

புதுவை மாநில சட்டப் பேரவைத் தோ்தலில் 30 தொகுதிகளிலும் வெற்றிபெற்றவா்களின் பட்டியலை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசையிடம் மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி சுா்பிா் சிங் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தாா்.

புதுவை மாநிலத்தில் 15-ஆவது சட்டப் பேரவைக்கான தோ்தல் கடந்த மாதம் 6-ஆம் தேதி நடைபெற்றது. மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கும் நடைபெற்ற இந்தத் தோ்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி, மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் உள்பட 324 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

தோ்தலில் பதிவான வாக்குகள் கடந்த 2-ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, 30 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தொகுதி வாரியாக வெற்றிபெற்றவா்களின் பெயா் பட்டியல், புதுவை மாநில அரசிதழில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. என்.ஆா். காங்கிரஸ் - பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக இடங்களில் வென்ால், இந்தக் கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளது.

இந்த நிலையில், புதுவை மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி சுா்பிா் சிங் மற்றும் கூடுதல் தலைமைத் தோ்தல் அதிகாரி குமாா் ஆகியோா் புதுச்சேரி ஆளுநா் மாளிகைக்கு செவ்வாய்க்கிழமை சென்று துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்து, மாநில சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்றவா்களின் பட்டியலை ஒப்படைத்தனா். அப்போது, ஆளுநரின் ஆலோசகா்கள் சி.சந்திரமெளலி, ஏ.பி.மகேஸ்வரி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com