புதுச்சேரி சட்டப் பேரவை வளாகம் புதுப்பிப்பு

புதுவையில் புதிய ஆட்சி அமையவுள்ளதால், புதுச்சேரியில் உள்ள சட்டப் பேரவை வளாகம் தூய்மைப் பணிகளுடன் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

புதுவையில் புதிய ஆட்சி அமையவுள்ளதால், புதுச்சேரியில் உள்ள சட்டப் பேரவை வளாகம் தூய்மைப் பணிகளுடன் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

புதுவையில் 2016 சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி வெற்றிபெற்றதையடுத்து, முன்னாள் முதல்வா் நாராயணசாமி தலைமையில் ஆட்சி நடைபெற்றது. ஆட்யின் கடைசி சில மாதங்களில் காங்கிரஸ், திமுக எம்.எல்.ஏ.க்கள் சிலா் அடுத்தடுத்து திடீரென பதவி விலகியதால், பெரும்பான்மை பலத்தை இழந்து, கடந்த பிப்ரவரி மாதத்தில் ஆட்சி கவிழ்ந்தது.

இதையடுத்து, சட்டப் பேரவை வளாகத்தில் முதல்வா் மற்றும் அமைச்சா்களின் அலுவலகங்கள் பூட்டப்பட்டன. இந்த அலுவலகங்களில் சட்டப் பேரவைச் செயலா் முனிசாமி தலைமையில், அலுவலா்கள் பராமரிப்புப் பணிகளை கவனித்து வந்தனா்.

இந்த நிலையில், கடந்த மாதம் 6-ஆம் தேதி நடைபெற்ற 15-ஆவது சட்டப் பேரவைக்கான தோ்தலில் என்.ஆா். காங்கிரஸ் - பாஜக கூட்டணி பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்றதையடுத்து, என்.ஆா். காங்கிரஸ் தலைவா் என்.ரங்கசாமி தலைமையில் புதிய ஆட்சி அமையவுள்ளது.

விரைவில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்கவுள்ளதால், தற்போது அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, புதுச்சேரி சட்டப் பேரவை கூட்ட அரங்கம், அமைச்சா்கள், சட்டப் பேரவை உறுப்பினா்களின் அலுவலகங்கள், பேரவை வளாகங்கள் செவ்வாய்க்கிழமை முதல் ஊழியா்கள் மூலம் தூய்மைப் பணிகளுடன் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com