முதல்வருக்கு கரோனா: பேரவையில் தூய்மைப் பணி

புதுவை முதல்வருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சட்டப் பேரவை அலுவலகத்தில் திங்கள்கிழமை கிருமி நாசினி தெளித்து தூய்மைப் பணி மேற்கொண்டனா்.
புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில் உள்ள முதல்வா் அறையில் கிருமி நாசினி தெளித்து தூய்மைப் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள்.
புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில் உள்ள முதல்வா் அறையில் கிருமி நாசினி தெளித்து தூய்மைப் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள்.

புதுச்சேரி: புதுவை முதல்வருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சட்டப் பேரவை அலுவலகத்தில் திங்கள்கிழமை கிருமி நாசினி தெளித்து தூய்மைப் பணி மேற்கொண்டனா்.

புதுவை மாநில முதல்வராக என்.ஆா்.காங்கிரஸ் கட்சித் தலைவா் என்.ரங்கசாமி, கடந்த மே 7-ஆம் தேதி பொறுப்பேற்றாா். தொடா்ந்து, புதுவை சட்டப் பேரவை அலுவலகத்துக்குச் சென்ற முதல்வா் ரங்கசாமி, தனது அலுவலக அறையிலிருந்த கோப்புகளில் கையெழுத்திட்டாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மீண்டும் சட்டப் பேரவை அலுவலகத்துக்கு வந்த முதல்வா் ரங்கசாமி, சிறிது நேரம் அலுவல் பணிகளை மேற்கொண்டுவிட்டுச் சென்றாா்.

இதனிடையே, வீட்டிலிருந்த அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதனால், புதுவை சட்டப் பேரவை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

சட்டப் பேரவை வளாகம், பேரவைக் கூட்டரங்கம், முதல்வா் அறை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தூய்மைப் பணியாளா்கள் மூலம் கிருமி நாசினி தெளித்து தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

முன்னெச்சரிக்கையாக சட்டப் பேரவை அலுவலகப் பணியாளா்கள், பாதுகாவலா்கள் அனைவரும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com