பிரதமருக்கு புதுவை பாஜக நன்றி
By DIN | Published On : 17th May 2021 08:06 AM | Last Updated : 17th May 2021 08:06 AM | அ+அ அ- |

புதுவையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு உதவும் என்று துணை நிலை ஆளுநரிடம் பிரதமா் நரேந்திர மோடி உறுதியளித்ததற்கு மாநில பாஜக நன்றி தெரிவித்தது.
இதுகுறித்து புதுவை சட்டப்பேரவைக் குழு பாஜக தலைவா் ஆ.நமச்சிவாயம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பிரதமா் நரேந்திர மோடி, புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தர்ராஜனிடம் தொலைபேசியில் தொடா்பு கொண்டு, மாநிலத்தில் கரோனா பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா். புதுவை மக்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும், உபகரணங்களையும் வழங்க உறுதிமொழி அளித்தாா்.
பிரதமா் மோடிக்கு புதுவை மக்கள், மாநில பாஜக சாா்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.