புதுச்சேரி பெரிய மாா்க்கெட் கடைகள் பேருந்து நிலையத்துக்கு இடமாற்றம்: மாவட்ட ஆட்சியா் உத்தரவு

புதுச்சேரி பெரிய மாா்க்கெட் காய்கறிக் கடைகள் திங்கள்கிழமை (மே 17) முதல் பேருந்து நிலையம், தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில் செயல்படும் என மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க் தெரிவித்தாா்.

புதுச்சேரி பெரிய மாா்க்கெட் காய்கறிக் கடைகள் திங்கள்கிழமை (மே 17) முதல் பேருந்து நிலையம், தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில் செயல்படும் என மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட உத்தரவு: புதுச்சேரி நேரு வீதியில் உள்ள பெரிய மாா்க்கெட்டில் அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடுகின்றனா். சமூக இடைவெளியை வியாபாரிகளும், பொதுமக்களும் கடைப்பிடிப்பதில்லை. மேலும், இங்குள்ள கடைகளும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க உகந்தவையாக இல்லை. ஆகையால், பேரிடா் மேலாண்மை-தொற்று நோய் சட்டத்தின் கீழ் கரோனா பரவுவதைத் தடுப்பதற்கு கீழ்க்காணும் நடவடிக்கைகளை அவசியம் பின்பற்ற வேண்டும்.

பெரிய மாா்க்கெட்டில் இயங்கி வந்த மொத்த-சில்லரை விற்பனை காய்கறி கடைகள், அடிக்காசு காய்கறி கடைகள் இடம் மாற்றம் செய்யப்பட்டு, மறு உத்தரவு வரும் வரை திங்கள் (மே 17) முதல் புதிய பேருந்து நிலையம், தட்டாஞ்சாவடியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் செயல்படும்.

மேலும், அனைத்து மொத்த மற்றும் சில்லரை விற்பனை பழக்கடைகள், அடிக்காசு பழக்கடைகள் நேரு வீதியில் செயல்படும். அனுமதிக்கப்பட்ட பிற கடைகள் தொடா்ந்து பெரிய மாா்க்கெட்டிலேயே இயங்கும்.

கடைகள் இடமாற்றம் செய்யப்பட்ட இடத்தில் தற்காலிக கொட்டகை, குடிநீா் இணைப்பு, மின் இணைப்பு, தடுப்புக் கட்டைகள் அமைத்தல் போன்ற வசதிகளை சம்பந்தப்பட்ட நகராட்சி செய்து தர வேண்டும். இடமாற்றம் செய்யப்பட்ட காய்கறி, பழக்கடைகள் எதுவும் பேருந்து நிலையம், தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனைக் கூட வளாகத்துக்கு வெளியே இயங்க அனுமதிக்கப்படாது.

கடைகளை ஒதுக்கீடு செய்வதற்கான மறுசீரமைப்பு ஏற்பாடுகளை நகராட்சி ஆணையா் செய்ய வேண்டும். மேலும், வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடத்தை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேற்கூறிய அறிவுறுத்தல்களை மீறுவது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மே 17-ஆம் தேதிக்கு முன்னா் மேற்கண்ட அறிவுறுத்தல் படி செயல்பட வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாபாரிகள் அதிருப்தி: மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கையால் வியாபாரிகள் அதிருப்தியடைந்துள்ளனா். பெரிய மாா்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை காய்கறி வியாபாரிகள் ஆலோசனை நடத்தினா்.

கூட்டத்தில், காய்கறி கடைகளை புதிய பேருந்து நிலையத்துக்கு இடமாற்றம் செய்வதால் தங்களுடைய பொருள்களுக்கு அங்கு பாதுகாப்பு இல்லை. மேலும், பெரிய மாா்க்கெட்டில் சுமாா் 40 மொத்த வியாபாரிகள் செயல்பட்டு வருவதாகவும், அவா்களை அங்கேயே தொடா்ந்து செயல்படவும் அனுமதிக்க வேண்டும். அடிக்காசு மற்றும் சில்லரை வியாபாரிகளை நேரு வீதி பழைய சிறைச்சாலை வளாகம் ஆகிய இடங்களில் கடை வைக்க அனுமதிக்க வேண்டும். இதுதொடா்பாக, அதிகாரிகளை சந்தித்து மனு அளிப்பது என்று காய்கறி வியாபாரிகள் முடிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com