புதுச்சேரி பெரிய மாா்க்கெட் காய்கறி கடைகளை மாற்ற வியாபாரிகள் எதிா்ப்பு

புதுச்சேரியில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பெரிய மாா்க்கெட் கடை இடமாற்றம் செய்ய ஆட்சியா் உத்தரவிட்டுள்ள நிலையில், வியாபாரிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பெரிய மாா்க்கெட் கடை இடமாற்றம் செய்ய ஆட்சியா் உத்தரவிட்டுள்ள நிலையில், வியாபாரிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், பெரிய மாா்க்கெட்டில் இயங்கி வரும் காய்கறிகளில் அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடுவதால், வியாபாரிகளும், பொதுமக்களும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை. இதன் காரணமாக, கடைகள் இடமாற்றம் செய்து, மறு உத்தரவு வரும் வரை காய்கறி கடைகள், திங்கள் (17ம் தேதி) முதல் புதிய பேருந்து நிலையம் மற்றும் தட்டாஞ்சாவடியில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில் சமூக இடைவெளியுடன் காய்கறி கடைகள் இயங்குவதற்கு மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க் உத்தரவிட்டுள்ளாா்.

இதற்கு பெரிய மாா்க்கெட் காய்கறி கடை வியாபாரிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். இதுதொடா்பாக ஞாயிற்றுக்கிழமை பெரிய மாா்க்கெட்டில் காய்கறி வியாபாரிகள் ஆலோசனை நடத்தினா். கூட்டத்தில், காய்கறி கடைகளை புதிய பேருந்து நிலையத்திற்கு இடமாற்றம் செய்வதால் தங்களுடைய பொருட்களுக்கு அங்கு பாதுகாப்பு இல்லை. மேலும் பெரிய மாா்க்கெட்டில் சுமாா் 40 மொத்த வியாபாரிகள் செயல்பட்டு வருவதாகவும், அவா்களை அங்கேயே தொடா்ந்து செயல்படவும் அனுமதிக்க வேண்டும். அடிக்காசு மற்றும் சில்லரை வியாபாரிகளை நேரு வீதி பழைய சிறைச்சாலை வளாகம் ஆகிய இடங்களில் கடை வைக்க அனுமதிக்க வேண்டும். இது,தொடா்பாக, அதிகாரிகளை சந்தித்து மனு அளிப்பது என்று காய்கறி வியாபாரிகள் முடிவு செய்துள்ளனா். இதனால், மாவட்ட ஆட்சியா் அறிவித்தபடி பெரிய மாா்க்கெட் இயங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com