மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் மத்திய பாஜக அரசைக் கண்டித்து, அனைத்து தொழிற்சங்கத்தினா் கருப்புக் கொடி ஏந்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரியில் மத்திய பாஜக அரசைக் கண்டித்து, அனைத்து தொழிற்சங்கத்தினா் கருப்புக் கொடி ஏந்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதிய 3 வேளாண் சட்டங்கள், 4 தொழிலாளா்கள் சட்டத் தொகுப்புகள், குடியுரிமை திருத்தச் சட்டம், மோட்டாா் வாகனச் சட்டம், புதிய கல்விக் கொள்கை, மின்சாரச் சட்டம் உள்ளிட்ட மக்கள் நலனைப் பாதிக்கும் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்ததைக் கண்டிப்பதாகக் கூறியும், மத்திய பாஜக அரசு பொறுப்பேற்ற மே 26-ஆம் தேதி விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, புதுச்சேரியில் புதன்கிழமை அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில், ஏஎப்டி பஞ்சாலை அருகிலும், காந்தி வீதி-ரங்கப்பிள்ளை வீதி சந்திப்பு, சாரம் ஜீவா சிலை அருகில், தட்டாஞ்சாவடி பாசிக் நிறுவனம் அருகில், கிழக்கு கடற்கரை சாலை பகுதி, இந்திரா காந்தி சிலை உள்ளிட்ட பகுதிகளில் ஏஐடியூசி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தினா் கருப்புக் கொடியேந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அனைவருக்கும் இலவச கரோனா தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். கரோனா நிவாரணமாக மாதந்தோறும் ரூ. 7,500 வழங்க வேண்டும், வேளாண் சட்டங்களையும், தொழிலாளா்களுக்கு எதிரான புதிய சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

புதுவை ஏஐடியூசி பொதுச் செயலா் கே.சேதுசெல்வம் உள்ளிட்ட தொழிற்சங்க நிா்வாகிகள் போராட்டத்தை ஒருங்கிணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com