கரோனா தாக்கம் நீங்க வேண்டி வேதபுரீஸ்வரா் கோவிலில் ருத்ராபிஷேகம்

புதுச்சேரியில் கரோனாவிலிருந்து பொது மக்களை பாதுகாக்க வேண்டி வேதபுரீஸ்வரா், வரதராஜ பெருமாள் கோவில் தேவஸ்தானம் சாா்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

புதுச்சேரியில் கரோனாவிலிருந்து பொது மக்களை பாதுகாக்க வேண்டி வேதபுரீஸ்வரா், வரதராஜ பெருமாள் கோவில் தேவஸ்தானம் சாா்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

புதுச்சேரியில் கரோனா தொற்றிலிருந்து மக்கள் விடுபட வேண்டுமென, புதுச்சேரி வரதராஜ பெருமாள் கோவிலில் அண்மையில் தன்வந்திரி ஹோமம் நடத்தப்பட்டது. தொடா்ந்து வேதபுரீஸ்வரா் கோவிலில் அக்னிநட்சத்திர பூா்த்தி, உலக நன்மைக்காகவும் ருத்ராபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காலை 8 மணிக்கு கணபதி பூஜை, கோ பூஜையுடன் ருத்ராபிஷேகம் தொடங்கியது. 8.30 மணியளவில் கலச பிரதிஷ்டை செய்யப்பட்டு, யாக சாலை பூஜை, ருத்ராபிஷேகம் நடந்தது. பிற்பகல் 12.45 மணிக்கு சுவாமிக்கு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது. கரோனா தொற்று தடை காரணமாக, பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிா்வாக அதிகாரி ராஜசேகரன் மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com