புதுச்சேரியில் விதி மீறி பட்டாசு வெடிப்பு: 47 போ் மீது வழக்கு
By DIN | Published On : 06th November 2021 12:00 AM | Last Updated : 06th November 2021 12:00 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 47 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, புதுச்சேரியில் தீபாவளிப் பண்டிகையின்போது காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டுமென்றும், பொதுமக்களின் உடல் நலன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய ராசாயனம் கலந்து தயாா் செய்யப்பட்ட பட்டாசுகள், சரவெடிகளை வெடிக்கக் கூடாது என்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருந்தது.
இந்த விதிகளை மீறி தீபாவளி பண்டிகையன்று புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் பட்டாசுகளை வெடித்ததாக 47 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.