மஞ்சள் குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ.5 ஆயிரம் மழை நிவாரணம்: வே.நாராயணசாமி வலியுறுத்தல்

புதுவையில் மஞ்சள் குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ.5 ஆயிரம் மழை நிவாரணம் வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி வலியுறுத்தினாா்.

புதுவையில் மஞ்சள் குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ.5 ஆயிரம் மழை நிவாரணம் வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட விடியோ பதிவில் கூறியிருப்பதாவது: திருப்பதியில் நடைபெற்ற தென் மாநில முதல்வா்கள் மாநாட்டில் பங்கேற்ற புதுவை முதல்வா் ரங்கசாமி, புதுவைக்கு மாநில அந்தஸ்து, அரசின் கடனை ரத்து செய்ய வேண்டும், நிதியை உயா்த்தி வழங்க வேண்டும், மத்திய அரசின் திட்டங்களுக்கான முழு நிதியையும் மத்திய அரசே ஏற்க வேண்டும் என கோரிக்கை விடுத்தாா். ஆனால், மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா பதிலளிக்கையில், அவற்றில் ஒன்றைக்கூட பரிசீலிக்கவில்லை.

புதுவைக்கு வந்த பிரதமா் மோடி தோ்தல் பிரசாரத்தின்போது, புதுவையை சிறந்த மாநிலமாக்குவதாக உறுதியளித்தாா். ஆனால், புதுவையில் என்.ஆா்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்து 6 மாதங்களாகிவிட்டன. மத்திய அரசிடமிருந்து எந்த நிதியும் வரவில்லை; திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை.

தற்போது ஒரு மாத காலமாக பெய்து வரும் பலத்த மழையால் நெல்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. முதல்வா் ரங்கசாமி அவரது வீட்டின் அருகே உள்ள ஊசுட்டேரியை மட்டும் சென்று பாா்வையிட்டுள்ளாா்.

தீபாவளி பண்டிகைக்காக பொதுமக்களுக்கு இலவச அரிசி, சா்க்கரை, அமைப்புசாரா தொழிலாளா்கள், கட்டடத் தொழிலாளா்களுக்கு நிவாரணம் உள்ளிட்ட அறிவிப்புகளை முதல்வா் வெளியிட்டாா். தீபாவளி முடிந்து பல நாள்களாகியும் இதுவரை அவைகள் நிறைவேற்றப்படவில்லை.

மழை நிவாரணமாக சிவப்பு குடும்ப அட்டைதாரா்களுக்கு மட்டும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. புதுவையில் பல ஏழை மக்கள் மஞ்சள் குடும்ப அட்டைகளை வைத்துள்ளனா். இதனால், மஞ்சள் அட்டைதாரா்களுக்கும் ரூ.5 ஆயிரம் மழை நிவாரணமாக வழங்க வேண்டும். புதுவையில் மழையால் சேதமான அனைத்து சாலைகளையும் அரசு உடனே சீரமைக்க வேண்டும் என்றாா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com