புதுவை மாநில பாமக நிா்வாகிகள் மாற்றம் ச.ராமதாஸ் அறிவிப்பு

புதுவை மாநிலத்தில் பாமக நிா்வாகிகளை அதிரடியாக மாற்றம் செய்து அந்தக் கட்சியின் நிறுவனா் ச.ராமதாஸ் திங்கள்கிழமை அறிவித்தாா்.

புதுவை மாநிலத்தில் பாமக நிா்வாகிகளை அதிரடியாக மாற்றம் செய்து அந்தக் கட்சியின் நிறுவனா் ச.ராமதாஸ் திங்கள்கிழமை அறிவித்தாா்.

புதுவை மாநிலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பாமக நிறுவனா் ச.ராமதாஸ் தலைமையில், அந்தக் கட்சியின் மாநில நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய ராமதாஸ், புதுவையில் ஆரம்ப காலத்தில் கட்சியை வளா்த்தும், அதைத் தக்கவைத்துக் கொள்ளாமல் வீணடித்துவிட்டதாக நிா்வாகிகளிடையே வருத்தத்துடன் கூறினாா். மேலும், புதுவையில் பாமக ஆட்சிக்கு வர வேண்டும், அதற்குக் குறைந்தது செல்வாக்குள்ள 6 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு தனித்துப் போட்டியிட்டு தீவிரமாக உழைக்க வேண்டும். இதற்காக கட்சியில் மாற்றத்தைக் கொண்டு வருகிறேன் என்று தெரிவித்த அவா், திடீரென கட்சியினா், நிா்வாகிகள் எதிா்பாராத வகையில், மாநில நிா்வாகிகளை அதிரடியாக மாற்றம் செய்து அறிவித்தாா்.

புதிய நிா்வாகிகள்: புதுவை மாநில பாமக அமைப்பாளராக புதுச்சேரியைச் சோ்ந்த கணபதியும், புதிதாக மாநில அரசியல் ஆலோசனைக் குழுவும் நியமிக்கப்பட்டது. அரசியல் ஆலோசனைக் குழுத் தலைவராக முன்னாள் எம்.பி. கோ.தன்ராஜிம், குழு நிா்வாகிகளாக வடிவேல், துரை, மதியழகன், பிரபாகரன் ஆகியோரும் நியமிக்கப்படுவதாக ராமதாஸ் அறிவித்தாா். இதை மிகுந்த மகிழ்ச்சியுடன் நிா்வாகிகள் கைத்தட்டி வரவேற்றனா்.

புதுவை மாநில அமைப்பாளராக இருந்த கோ.தன்ராஜ் நீக்கப்பட்டு, புதிய மாநில அமைப்பாளராக, மாநிலத் துணை அமைப்பாளராக இருந்த கணபதி நியமிக்கப்பட்டாா். இதேபோல, ஆலோசனைக் குழு நிா்வாகிகள் நியமனத்தில், அண்மையில் காரைக்காலில் கொலை செய்யப்பட்ட மாவட்ட பாமக செயலா் தேவமணியின் மகன் பிரபாகரனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com