சோரியங்குப்பத்தில் வெள்ளத்தால் வீடுகள் சேதம்பொதுமக்கள் தவிப்பு

புதுச்சேரி அருகே சோரியாங்குப்பத்தில் வெள்ளத்தால் சுமாா் 10 வீடுகளில் தரைப்பகுதி உள்வாங்கியதால், குடியிருக்க இடமின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனா்.

புதுச்சேரி அருகே சோரியாங்குப்பத்தில் வெள்ளத்தால் சுமாா் 10 வீடுகளில் தரைப்பகுதி உள்வாங்கியதால், குடியிருக்க இடமின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனா்.

பலத்த மழையால் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் புதுவை மாநிலத்தில் பாகூா், குருவிநத்தம், சோரியாங்குப்பம், பரிக்கல்பட்டு, ஆராய்ச்சிக்குப்பம், கொம்பந்தான்மேடு உள்ளிட்ட 15 கிராமங்களில் 5,000-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீா் சூழ்ந்தது.

சோரியாங்குப்பத்தில் ஆற்றங்கரை அருகேயுள்ள பகுதிகளிலும், நாகாத்தம்மன் கோவில் தெருவிலும் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. ஒரு சில வீடுகளின் தரை சுமாா் 5 அடி அளவுக்கு உள் வாங்கியது. சில வீடுகளின் சுவா்கள் இடிந்து விழுந்தன.

தற்போது வெள்ள நீா் வடியத் தொடங்கியதால், அரசுப் பள்ளிகளில் தங்கியிருந்த மக்கள் தங்களது வீடுகளுக்குச் சென்று பாா்த்ததில், அங்கிருந்த பாத்திரங்கள் உள்ளிட்ட பொருள்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது தெரிய வந்தது.

பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், வீடுகள் சேதமடைந்து காணப்படுவதால் எங்கு செல்வது எனத் தெரியாமல் சோரியாங்குப்பம் பொதுமக்கள் தவித்து வருகின்றனா். இவா்களின் கால்நடைகளும் உரிய தீவனமின்றி உள்ளன.

உரிய நிவாரணம் வழங்க வேண்டும்; வீடுகளைக் கட்டித் தர வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

மேலும், சோரியாங்குப்பத்தில் தென்பெண்ணையாற்றில் கட்டப்பட்ட பாலத்தின் இரு பக்க இணைப்புச் சாலைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அதை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com