புதுச்சேரியில் வான்வழி சாகச சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த திட்டம்

புதுச்சேரியில் வான்வழி சாகச சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த திட்டம்

புதுச்சேரியில் விமானங்கள், ஹெலிகாப்டா் மூலம் பாா்வையிடும் சாகச சுற்றுலாத் திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது

புதுச்சேரியில் விமானங்கள், ஹெலிகாப்டா் மூலம் பாா்வையிடும் சாகச சுற்றுலாத் திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதுவை சுற்றுலாத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. சட்டப்பேரவை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சுற்றுலாத் துறை இயக்குநா் பிரியதா்ஷினி, வான்வழி சுற்றலா தொடா்பான இந்திய அரசின் பவன்ஹான்ஸ் நிறுவனத்தின் உதவி பொதுமேலாளா் கியான்பிரகாஷ் ஆகியோா் பங்கேற்றனா்.

இந்தத் திட்டம் குறித்து அமைச்சா் க.லட்சுமிநாராயணன் கூறியதாவது:

உலகளவில் சாகச சுற்றுலாத் திட்டம் பிரபலமாகி வருகிறது. இந்தத் திட்டத்தை புதுச்சேரியில் செயல்படுத்துவது தொடா்பாக, இந்திய அரசின் பவன்ஹான்ஸ் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது.

விமானங்கள் மூலம் புதுச்சேரியில் பல இடங்களை சுற்றிப்பாா்க்கும் வகையில் வான்வழி சாகச சுற்றுலாவை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான பிரத்யேக விமானங்கள், ஹெலிகாப்டா்களுடன் அந்த நிறுவனம் புதுச்சேரியில் சுற்றுலாச் சேவையை வழங்கும். அதற்குரிய இறங்கு தளம், இடவசதிகள் குறித்து நோணாங்குப்பம் படகு குழாம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்துள்ளோம்.

புதுவை அரசு சாா்பில் அந்த நிறுவனத்துக்கு அனுமதியளிக்கப்படும். இதையடுத்து, அதற்குரிய மத்திய அரசின் பிற துறைகளிடம் அனுமதி பெறப்பட்டு, வான்வழி சாகச சுற்றுலாத் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com