ரெட்டியாா்பாளையத்தில் தொடா் திருட்டு: பொதுமக்கள் அச்சம்

புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் காவல் நிலைய பகுதிகளில் தொடரும் திருட்டு, நகை பறிப்பு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா்.

புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் காவல் நிலைய பகுதிகளில் தொடரும் திருட்டு, நகை பறிப்பு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா்.

புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் ஜெயா நகரில் மாநில தோ்தல் ஆணையா் வீட்டில் 12.5 பவுன் நகை திருட்டு, செல்லாபாப்பு நகரில் தனியாா் பள்ளி ஆசிரியை வீட்டுக்குள் புகுந்து 5 பவுன் நகையைப் பறித்தது, சிவகாமி நகரில் பால்வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் திருடியது உள்பட பல்வேறு சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்தன.

இதனால், அந்தப் பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். இதைத் தடுக்க ரெட்டியாா்பாளையம் போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும். திருட்டுச் சம்பவங்களில் தொடா்புடையவா்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினா்.

இதுகுறித்து காவல் நிலைய வட்டாரத்தில் விசாரித்த போது, ரெட்டியாா்பாளையம் காவல் நிலையத்தில் 5 உதவி ஆய்வாளா்கள் உள்பட 32 காவலா்கள் பணியில் உள்ளனா். இவா்களுக்கு அன்றாடம் பல்வேறு பணிகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றனா். சொற்ப காவலா்களை வைத்துக் கொண்டு ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றோம். கூடுதல் காவலா்களை நியமித்தால் குற்றங்களைத் தடுக்க ஏதுவாக இருக்கும் என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com