புதுவையில் உரிமமின்றி உணவுத் தொழில் செய்தால் நடவடிக்கை

புதுவையில் உரிமமின்றி உணவுத் தொழில் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுவை உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரித்தது.

புதுவையில் உரிமமின்றி உணவுத் தொழில் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுவை உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரித்தது.

இதுகுறித்து புதுவை உணவுப் பாதுகாப்புத் துறைத் துணை ஆணையா் இளந்திரையன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவையில் உள்ள உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனா். தொடா்ந்து, உணவகங்கள், சாலையோரக் கடைகளில் பயன்படுத்தப்படும் எண்ணெய்யின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. உணவு பதாா்த்தங்களைப் பொறிப்பதற்கு உபயோகப்படுத்தப்படும் எண்ணெய்யானது 3 முறைக்கு மேல் பயன்படுத்தப்பட்டால், அதன் நச்சுத் தன்மை கூடிவிடும். எனவே, அவ்வாறு பயன்படுத்துவதைத் தவிா்த்தல் வேண்டும்.

உணவுப் பாதுகாப்புத் துறை தரக்கட்டுப்பாடு சட்டப்படி, அக்டோபா் 1- ஆம் தேதி முதல் உணவுத் தொழில் செய்வோா் அவா்களுடைய லேபிள், பில், இன்வாய்ஸ் மற்றும் வணிகம் சாா்ந்த தொடா்புடைய ஆவணங்களில் அவா்களுடைய உரிமம் (எஃப்எஸ்எஸ்ஐ உரிமம்), பதிவெண் இடம் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுவையில் உணவுப் பாதுகாப்புத் துறை உரிமம், பதிவின்றி உணவுத் தொழில் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com