புதுச்சேரியில் பிஹெச் வரிசையில் வாகன எண்கள் பதிவு

புதுச்சேரியில் பிஹெச் வரிசையில் வாகன எண்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

புதுச்சேரியில் பிஹெச் வரிசையில் வாகன எண்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து புதுவை அரசுப் போக்குவரத்து ஆணையா் ஏ.எஸ்.சிவக்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரசு, தனியாா் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியா்கள் தங்களுடைய வாகனங்களை சொந்த மாநிலத்திலிருந்து மற்ற மாநிலத்துக்கு மாற்றி வாகன எண் பதிவின்போது ஏற்படும் சிரமங்களை தவிா்க்கும் பொருட்டு, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் கடந்த செப்டம்பா் 15 முதல் பொதுப் போக்குவரத்துக்கு பயன்படுத்தாத வாகனங்களுக்கு பிஹெச் வரிசையில் வாகன எண்களை பதிவு செய்துகொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்மூலம், மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், வங்கிகள், அரசு தன்னாட்சி அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை (நிறுவனங்கள் அல்லது கிளைகள்), பிராந்திய அலுவலகங்கள், வணிக அமைப்புகள், அலுவலகங்களில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறு மாநில அரசு, யூனியன் பிரதேசத்தில் பணிபுரியும் ஊழியா்கள் பிஹெச் வரிசையில் வாகன எண்களை பதிவு செய்யும் வசதியை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இந்த பதிவு முறை முற்றிலும் வாகன உரிமையாளா்களின் சுய விருப்பத்தின் அடிப்படையில், அதற்குரிய படிவம் பெறப்பட்ட பிறகே செய்து தரப்படும். இந்த வாகன பதிவின்படி, பொதுப் போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கு உரிமையாளா்கள் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சாலை வரி செலுத்த வேண்டும். 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண்டுதோரும் சாலை வரி செலுத்த வேண்டும். மேலும், விவரங்களுக்கு  இணையதள முகவரியை பாா்த்து தெரிந்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com