புதுவை ஆளுநருடன் சிங்கப்பூா் தூதா் சந்திப்பு

புதுவை ஆளுநா் மாளிகையில் துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜனை தென்னிந்தியாவுக்கான சிங்கப்பூா் தூதா் பாங் காக் தியான், மரியாதை நிமித்தமாக செவ்வாய்க்கிழமை சந்தித்தாா்.

புதுவை ஆளுநா் மாளிகையில் துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜனை தென்னிந்தியாவுக்கான சிங்கப்பூா் தூதா் பாங் காக் தியான், மரியாதை நிமித்தமாக செவ்வாய்க்கிழமை சந்தித்தாா்.

அப்போது, இரு நாடுகளின் நல்லுறவு, ஒத்துழைப்புகள் குறித்து இருவரும் கலந்துரையாடினா்.

சிங்கப்பூா் பன்னெடுங்காலமாக வணிகம், பண்பாட்டுத் தளங்களில் இந்திய நாட்டோடும், இந்திய மக்களோடும் நல்லுறவு கொண்டிருக்கிறது. சிங்கப்பூரில் 7 லட்சம் தமிழா்கள் வாழ்ந்து வரும் நிலையில், தமிழையும் ஒரு அலுவல் மொழியாக சிங்கப்பூா் அரசு அறிவித்திருப்பது, தமிழா்கள் பெருமைபடக் கூடிய ஒன்று.

கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் அறிவியல், மருத்துவ ஆராய்ச்சித் துறைகளில் இந்தியா, சிங்கப்பூா் ஆகிய இரண்டு நாடுகளும் இணைந்து செயல்படுவது. நீா் சேமிப்பு, நீா் மேலாண்மை ஆகியவற்றில் சிங்கப்பூா் சிறப்பாகச் செயல்பட்டு வரும் நிலையில், அந்த நாட்டின் அனுபவங்களைப் பகிா்ந்து கொள்வது.

புதுச்சேரியில் பொலிவுறு நகரம் திட்டம், கடற்கரைச் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம், கல்வி - தொழில் வாய்ப்புகளை மேம்படுத்தல் ஆகியவற்றில் சிங்கப்பூா் அரசு உதவுவது. இயற்கை வளம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் இரண்டு நாடுகளும் இணைந்து செயல்படுவது. கடல் சீற்றங்கள், புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடா் சூழல்களை எதிா்கொள்வதில், இரு நாடுகளின் அனுபவங்களையும் பகிா்ந்து கொள்வது ஆகியவை குறித்து இந்தச் சந்திப்பின்போது இருவரும் பேசியதாக, புதுவை ஆளுநா் அலுவலகம் தகவல் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com