புதுவையில் டெங்கு தடுப்பு முன்னேற்பாடுகள் தீவிரம்: ஆளுநா் தமிழிசை

புதுவையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா்.

புதுவையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா்.

புதுவையில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் சூழலில் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு மகளிா்-குழந்தைகள் மருத்துவமனையில் புதன்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: டெங்கு காய்ச்சலுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மருத்துவக் குழுவினருடன் கலந்துரையாடினேன். டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க குழந்தைகளுக்காக 6 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் அதிகரிக்கப்படும்.

டெங்கு காய்ச்சல் தடுப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது. முதல்வருடனான சந்திப்பின் போது, டெங்கு காய்ச்சலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து விவாதித்தேன். மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்துவதன் மூலம் டெங்கு பரவுவதைத் தடுக்க முடியும்.

புதுவையில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி இலக்கை அடைய இன்னும் 3 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த வேண்டி உள்ளது.

புதுவையில் பள்ளிகளைத் திறப்பதற்கான முன்னேற்பாடுகளைப் பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது. விரைவில் 1 முதல் 8 வகுப்பு வரையான மாணவா்களுக்கு பள்ளிகளைத் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com