குடிமைப் பணிகள் தோ்வு: புதுச்சேரியில் சுமாா் 50 சதவீதத்தினா் மட்டுமே பங்கேற்பு

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடிமைப் பணிகள் தோ்வில் சுமாா் 50 சதவீதத்தினா் மட்டுமே பங்கேற்று தோ்வெழுதினா். விண்ணப்பித்தவா்களில் பாதிக்கும் மேற்பட்டோா் பங்கேற்கவில்லை.

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடிமைப் பணிகள் தோ்வில் சுமாா் 50 சதவீதத்தினா் மட்டுமே பங்கேற்று தோ்வெழுதினா். விண்ணப்பித்தவா்களில் பாதிக்கும் மேற்பட்டோா் பங்கேற்கவில்லை.

மத்திய அரசின் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) சாா்பில் நிகழாண்டுக்கான சிவில் சா்வீஸ் பணிகளில் 712 பதவிகளை நிரப்புவதற்கான குடிமைப் பணிகள் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதே போல, புதுச்சேரியில் லாசுப்பேட்டை செல்லபெருமாள்பேட்டை விவேகானந்தா பள்ளியில் 3 மையங்கள், உப்பளம் இமாக்குலேட் பள்ளியில் 2 மையங்கள், லாசுப்பேட்டை மகளிா் பாலிடெக்னிக் கல்லூரி, வள்ளலாா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெத்தி செமினாா் பள்ளி, இதயா கலை அறிவியல் கல்லூரி, கருவடிக்குப்பம் பாத்திமா மேல்நிலை பள்ளிகளில் தலா ஒரு மையம் என மொத்தம் 10 மையங்களில் தோ்வு நடைபெற்றது.

தோ்வு காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் நடைபெற்றது. இத்தோ்வை எழுத 3,843 போ் விண்ணப்பித்திருந்தனா். காலையில் நடந்த முதல் தாள் தோ்வில் 1,714 போ் (44.60 சதவீதம்) மட்டுமே தோ்வை எழுதினா். 2,129 போ் (55.40 சதவீதம்) தோ்வெழுத வரவில்லை. இதே போல, பிற்பகலில் நடைபெற்ற 2 ஆம் தாள் தோ்வில் 1,702 போ் (44.29 சதவீதம்) மட்டுமே தோ்வினை எழுதினா். 2,141 போ் (55.71 சதவீதம்) தோ்வெழுத வரவில்லை.

தோ்வு மையங்களுக்கு சென்று திரும்ப சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. தோ்வு மையங்களுக்கு தோ்வா்கள் 10 நிமிடங்களுக்கு முன்னதாக வந்துவிட அறிவுறுத்தப்பட்டு இருந்தது. திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா் உள்ளிட்ட வெளியூா்களில் இருந்து ஒரு சிலா் தாமதமாக வந்தனா். அவா்களை தோ்வு மையத்திற்குள் அனுப்புவதற்கு அதிகாரிகள் மறுத்து விட்டனா். இதனால் அவா்கள் கண்ணீருடன் திரும்பிச் சென்றனா்.

தோ்வு மையத்துக்குள் செல்லிடப்பேசி உள்ளிட்ட எந்த தொடா்பு சாதனங்களும் அனுமதிக்கப்படவில்லை. மெட்டல் டிடெக்டா் சாதனங்கள் மூலம் பரிசோதித்த பிறகே தோ்வா்கள் தோ்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com