ஜிப்மரில் வெளிப்புற சிகிச்சை பதிவுக்கான நேரம் குறைப்பு

ஜிப்மரில் வெளிப்புற சிகிச்சை, சிறப்பு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பதிவு செய்வதற்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

ஜிப்மரில் வெளிப்புற சிகிச்சை, சிறப்பு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பதிவு செய்வதற்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து புதுச்சேரி ஜிப்மா் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஜிப்மா் மருத்துவமனையில் நோயாளிகள் காத்திருப்பு நேரத்தை குறைக்கும் வகையில், முன்பு இயங்கியதைப் போலவே அந்தந்த துறைகளில் உள்ள வெளிப்புற சிகிச்சை பிரிவில் பழைய நோயாளிகள் பதிவு செய்வதற்கான பதிவு மையங்கள் செயல்படும்.

ஏற்கெனவே பதிவு மையமாக செயல்பட்டுக் கொண்டிருந்த இன்ஸ்டிடியூட் பிளாக், சூப்பா் ஸ்பெஷாலிட்டி பிளாக் ஆகியவை வெளிப்புற நோயாளிகளை பரிசோதிக்கும் இடங்களாக செயல்படும். இன்ஸ்டிடியூட் பிளாக், மகளிா் மற்றும் குழந்தை மருத்துவமனை, மண்டல புற்றுநோய் மையம் ஆகியவை வழக்கம் போல செயல்படும்.

காலை 8 மணி முதல் 11 மணி வரை இருந்த புதிய நோயாளிகள் பதிவுக்கான நேரம் தற்போது காலை 7 மணி முதல் 10.30 மணி ஆக மாற்றப்பட்டுள்ளது. அதேபோல, காலை 8 மணி முதல் 12.30 மணி வரை இருந்த பழைய நோயாளிகள் பதிவுக்கான நேரம், 7 மணி முதல் 12 மணி ஆக மாற்றப்பட்டுள்ளது.

சிறப்பு சிகிச்சைக்கான பதிவுக்கு முன்பு மதியம் 12.30 மணி முதல் 3 மணி ஆக இருந்தது. தற்போது அது 12 மணி முதல் 2 மணி ஆக குறைக்கப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com