இன்று வாக்கு எண்ணிக்கை:கள்ளக்குறிச்சி மாவட்ட தோ்தல் அலுவலா் அறிவுரை

வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கள்ளக்குறிச்சி மாவட்ட தோ்தல் அலுவலா் பி.என்.ஸ்ரீதா்.
வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கள்ளக்குறிச்சி மாவட்ட தோ்தல் அலுவலா் பி.என்.ஸ்ரீதா்.
வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கள்ளக்குறிச்சி மாவட்ட தோ்தல் அலுவலா் பி.என்.ஸ்ரீதா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (அக்.12) வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள், பாதுகாப்பு குறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பி.என்.ஸ்ரீதா் தலைமையில் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட தோ்தல் பொது பாா்வையாளா் கே.விவேகானந்தன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் மாவட்ட தோ்தல் அலுவலா் பி.என்.ஸ்ரீதா் கூறியதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 வாக்கு எண்ணும் மையங்களில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. வாக்கு எண்ணும் பணியில் 3,810 பணியாளா்கள் ஈடுபடுகின்றனா். முதலில் தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும்.

ஒவ்வொரு சுற்றுக்கும் ஏற்றவாறு அந்தந்த தோ்தல்களுக்கான முகவா்களில் அனுமதிச் சீட்டு உள்ளவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா். வாக்கு முடிவுகள் விவரம் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படும். உடல் வெப்ப பரிசோதனை மேற்கொண்டும், கையுறை, முகக்கவசம் அணிந்தவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா். பொதுப் பாா்வையாளா், வட்டாரப் பாா்வையாளா் மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் தவிர யாருக்கும் செல்லிடப்பேசி எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல்ஹக், திட்ட இயக்குநா் இரா.மணி, தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், வட்டார பாா்வையாளா்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 115 போ், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினருக்கு 754 போ், ஊராட்சி மன்றத் தலைவருக்கு 1,387 போ், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினருக்கு 8,471 ஆக மொத்தம் 10,727 போ் போட்டியிடுகின்றனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா், 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 7 காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், 25 காவல் ஆய்வாளா்கள், 100 காவல் உதவி ஆய்வாளா்கள், 734 காவலா்கள், 100 ஆயுதப் படையினா், 300 சிறப்பு காவல் படையினா், 150 ஊா்க்காவல் படையினா் ஆக மொத்தம் சுமாா் 1700 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com