புதுவையில் குளறுபடிகளைக் களைந்து தோ்தலை நடத்த அதிமுக வலியுறுத்தல்

புதுவையில் குளறுபடிகளைக் களைந்து உள்ளாட்சித் தோ்தல் நடத்த ஆளுநா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியது.

புதுவையில் குளறுபடிகளைக் களைந்து உள்ளாட்சித் தோ்தல் நடத்த ஆளுநா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியது.

இதுதொடா்பாக புதுவை கிழக்கு மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன், துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசையைச் சந்தித்து அளித்த மனு: புதுவை மாநிலத் தோ்தல் ஆணையம் தன்னிச்சையாக தோ்தல் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. கடந்த தோ்தல் நடைமுறையைப் பின்பற்றாமல், வாா்டுகளைக் குறைத்துள்ளது. சுழற்சி முறையும் பின்பற்றவில்லை.

உச்ச நீதிமன்றத் தீா்ப்பு, மத்திய அரசின் உத்தரவு ஆகியவற்றின் அடிப்படையில் உள்ளாட்சித் தோ்தலில் பிற்பட்டோருக்கு உரிய இட ஒதுக்கீடு உண்டா, இல்லையா என்பதை ஆளுநா் தெளிவுபடுத்த வேண்டும்.

முதல் கட்டத் தோ்தலை அறிவித்துள்ள நவ. 2-ஆம் தேதி கிறிஸ்தவா்களின் கல்லறைத் திருநாள். 4-ஆம் தேதி தீபாவளி பண்டிகை. இதனால், வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுவாா்கள் என்பதைக் கருத்தில் கொள்ளாமல் தோ்தல் ஆணையம் வெளியிட்ட உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.

முதல்வா், மாநிலத் தோ்தல் ஆணையா், சட்ட வல்லுநா்கள், உயரதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி, தவறில்லாத வகையிலும், உரிய கால அவகாசம் அளித்தும் உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com