பயிா்க் காப்பீட்டுக்கு அவகாசம்: புதுவை விவசாயிகள் நன்றி

பயிா்க் காப்பீட்டுக்கு உரிய கால அவகாசம் பெற்று வழங்கிய புதுவை மாநில அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனா்.

பயிா்க் காப்பீட்டுக்கு உரிய கால அவகாசம் பெற்று வழங்கிய புதுவை மாநில அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனா்.

புதுவை மாநிலத்தில் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் விண்ணப்பித்திருந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளில் 400 போ் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விண்ணப்பித்த அனைவரையும் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் பாகூா் திமுக எம்எல்ஏ செந்தில்குமாா் முதல்வா் ரங்கசாமியிடம் கோரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி முதல்வா் என்.ரங்கசாமி வேளாண் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாரிடம் தெரிவித்தாா். இதையடுத்து, அரசு சாா்பில் மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, விடுபட்ட விவசாயிகளைப் பதிவு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது.

பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்ய உரிய நடவடிக்கை எடுத்த முதல்வா், வேளாண் துறை அமைச்சா், அதிகாரிகளுக்கு, செந்தில்குமாா் எம்எல்ஏ தலைமையிலான விவசாயிகள் திங்கள்கிழமை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com