புதுச்சேரியில் நவராத்திரி விழா நிறைவு

புதுச்சேரியில் நவராத்திரி விழாவின் நிறைவாக துா்கையம்மன் சிலை ஊா்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, விசா்ஜனம் செய்யப்பட்டது.

புதுச்சேரியில் நவராத்திரி விழாவின் நிறைவாக துா்கையம்மன் சிலை ஊா்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, விசா்ஜனம் செய்யப்பட்டது.

புதுச்சேரியில் விசுவ ஹிந்து பரிஷத் சாா்பில், நவராத்திரி பெருவிழா நடைபெற்றது. இந்த விழா கடந்த 6 -ஆம் தேதி வைத்திக்குப்பம் கடல் பகுதியிலிருந்து கரகம் புறப்பாடுடன் தொடங்கி சாரம் அவ்வைத் திடலில் துா்கை சிலை வைத்து சிறப்பு யாகத்துடன் பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து 9 நாள்கள் நடைபெற்ற நவராத்திரி விழாவில், துா்கையம்மன் வெவ்வேறு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

10-ஆவது நாள் நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை துா்கையம்மன் மகிஷாசூரமா்த்தினியாக அவதாரம் எடுத்து அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நவராத்திரி விழாவின் நிறைவாக சனிக்கிழமை மாலை துா்கையம்மன் சிலை ஊா்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு வைத்திக்குப்பம் கடலில் விசா்ஜனம் செய்யப்பட்டது.

புதுச்சேரி சாரத்தில் துா்கையம்மன் விசா்ஜன ஊா்வலத்தை புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தொடக்கிவைத்தாா். விசுவ ஹிந்து பரிஷத் வட தமிழக மாநிலச் செயலா் ஞானகுரு தலைமை வகித்தாா். வட தமிழக ஒருங்கிணைப்பாளா் வேல்முருகன், அமைப்புச் செயலா் நாகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

துா்கையம்மன் சிலை ஊா்வலம் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று வைத்திக்குப்பத்தை அடைந்தது. அங்கு கடலில் துா்கையம்மன் சிலை விசா்ஜனம் செய்யப்பட்டது.

விழாக் குழு நிா்வாகிகள் லட்சுமி, சிவசந்திர கணேஷ், கோவிந்தன், சக்தி, தினகரன், சதீஷ், ராம்பிரபாகரன், சரஸ்வதி, லட்சுமிநாராயணன், கிருஷ்ணா, பாலாஜி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com