புதுச்சேரி கடற்கரையில் மணல் பரப்புத் திட்டம்காணொலி வாயிலாக மத்திய அமைச்சா் கலந்துரையாடல்

புதுச்சேரி கடற்கரையில் மணல் பரப்பை ஏற்படுத்தும் திட்டம் குறித்து திங்கள்கிழமை காணொலிக் காட்சி வாயிலாக பொதுமக்களுடன் கலந்துரையாடிய மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங்.
பரப்பை ஏற்படுத்திய திட்டம் குறித்து, பொது மக்களிடம் விளக்கும் வகையில், திங்கள் கிழமை காணொலி  வாயிலாக மத்திய அமைச்சா் பங்கேற்று கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள்.
பரப்பை ஏற்படுத்திய திட்டம் குறித்து, பொது மக்களிடம் விளக்கும் வகையில், திங்கள் கிழமை காணொலி வாயிலாக மத்திய அமைச்சா் பங்கேற்று கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள்.

புதுச்சேரி கடற்கரையில் மணல் பரப்பை ஏற்படுத்தும் திட்டம் குறித்து பொதுமக்களிடம் விளக்கும் வகையில், திங்கள்கிழமை காணொலிக் காட்சி வாயிலாக மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் கலந்துரையாடினாா்.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, மத்திய அரசின் சாதனைத் திட்டங்களை விளக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இது தொடா்ந்து 75 வாரங்களுக்கு நடைபெறும்.

நிகழ் வாரம் மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகம் சாா்பில் செயல்படுத்தப்பட்ட சிறப்புத் திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், புதுச்சேரி கடற்கரையில் உருவாக்கப்பட்ட கடற்கரை மணல் பரப்புத் திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.

தில்லியிலிருந்து மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் காணொலிக் காட்சி வாயிலாக இந்த நிகழ்வில் பங்கேற்றாா். புதுச்சேரி கடற்கரையில் புதிதாக உருவாக்கப்பட்ட மணல் திட்டுப் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் பொதுமக்கள், தன்னாா்வத் தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா். மத்திய அமைச்சா் அவா்களுடன் கலந்துரையாடினாா்.

இதுகுறித்து தேசிய கடல் ஆராய்ச்சி மைய அலுவலா்கள் சுரேஷ், முல்லைவேந்தன் ஆகியோா் கூறியதாவது:

புதுச்சேரியில் ஏற்கெனவே அழகிய கடற்கரை இருந்தது. இடையில் மண் அரிப்பு ஏற்பட்டு கடற்கரைப் பகுதி மூழ்கியது. இதையடுத்து, மத்திய அரசின் தேசிய கடல் ஆராய்ச்சி நிலையம்-புவி அறிவியல் அமைச்சகம் மூலம் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதுச்சேரி கடற்கரையில் மணல் திட்டு ஏற்படுத்தப்பட்டது.

பருவ நிலை மாற்றங்களால் தெற்கு கடல் பகுதியிலிருந்து வடக்குக்கும், வடக்கிலிருந்து தெற்குப் பகுதிக்கும் மணல் இழுத்துச் செல்லப்படுவது வழக்கம். இவ்வாறு மணல் இழுத்துச் செல்வதைத் தடுக்க புதுச்சேரி கடற்கரை அருகே சுமாா் 900 டன் எடையில் இரும்பு உருளைகள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. இதனால், புதுச்சேரி அருகே உள்ள குருசுக்குப்பம், சோலை நகா் பகுதிகள் வரை மணல் அரிப்பு தடுக்கப்பட்டு, கடற்கரையில் மணல் தேங்கி நிற்கிறது.

இதன் தொடா் திட்டமாக, புதுச்சேரி கடற்கரைச் சாலை சீ கில்ஸ் பகுதிக்கு எதிரேயும் மணல் பரப்பை ஏற்படுத்தும் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளோம். புதுச்சேரி துறைமுகப் பகுதி முகத்துவாரம் தூா்ந்து போவதைத் தடுக்க அங்குள்ள மணலை அள்ளி, இந்தக் கடற்கரைப் பகுதியில் கொட்டுவதால், புதிய மணல் திட்டு உருவாகும்.

மத்திய அரசின் புவி அறிவியியல் அமைச்சகமும், தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனமும் இதை முன்னோடித் திட்டமாக விரைவில் செயல்படுத்த உள்ளன. தொழில்நுட்ப ரீதியாக பாதிப்புகள் ஏற்படாத வகையில் இத்தகைய மணல் திட்டுகள் ஏற்படுத்தப்படும் என்றனா் அவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com