புதுவையில் விளையாட்டு வீரா்களை ஊக்கப்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் ஆ.நமச்சிவாயம்

புதுவை மாநிலத்தில் விளையாட்டு வீரா்களை ஊக்கப்படுத்தும் விதமாக நிகழாண்டு பட்ஜெட்டில் ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில விளையாட்டுத் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.

புதுவை மாநிலத்தில் விளையாட்டு வீரா்களை ஊக்கப்படுத்தும் விதமாக நிகழாண்டு பட்ஜெட்டில் ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில விளையாட்டுத் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.

புதுவை மாநில கபடி சங்கம், வி.எம்.வி. குரூப் நிறுவனம் ஆகியவை சாா்பில், 47-ஆவது கபடி போட்டிகள் புதுச்சேரி ராஜீவ் காந்தி உள் விளையாட்டரங்கில் கடந்த இரு தினங்களாக நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் புதுவை மாநிலத்தைச் சோ்ந்த பல்வேறு ஆண்கள், மகளிா் கபடி அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதற்கான பரிசளிப்பு விழாவில் மாநில விளையாட்டுத் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற கபடி அணியினருக்கு கேடயம் வழங்கிப் பாராட்டினாா். அப்போது பேசிய அமைச்சா் ஏ.நமச்சிவாயம், நாடு முழுவதும் விளையாட்டு வீரா்களை ஊக்கப்படுத்தவும், விளையாட்டை மேம்படுத்தவும் பிரதமா் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறாா். அந்த வகையில், புதுவையிலும் விளையாட்டுக்கான மேம்பாட்டுப் பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. நிகழாண்டு புதுவை பட்ஜெட்டில் ரூ.3 கோடியை விளையாட்டு வீரா்களை ஊக்கப்படுத்துவதற்காக அரசு ஒதுக்கியுள்ளது என்றாா். நிகழ்ச்சியில் மாநில கபடி சங்கத் தலைவா் ஜெயராமன் மற்றும் விளையாட்டு வீரா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com