ஜிஎஸ்டி சட்டத் திருத்தத்தில் வியாபாரிகளுக்கு சலுகைகள்புதுவை முதல்வா் நம்பிக்கை

புதுவையில் சரக்கு-சேவை வரிக்கான சட்டத் திருத்தத்தில் காலத்துக்கேற்ப வியாபாரிகளுக்கு சலுகைகள் வழங்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி நம்பிக்கை தெரிவித்தாா்.

புதுவையில் சரக்கு-சேவை வரிக்கான சட்டத் திருத்தத்தில் காலத்துக்கேற்ப வியாபாரிகளுக்கு சலுகைகள் வழங்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி நம்பிக்கை தெரிவித்தாா்.

புதுவை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் 6-ஆவது நாளான வியாழக்கிழமை முதல் நிகழ்வாக, ஜிஎஸ்டி (சரக்கு-சேவை) வரிக்கான சட்டத் திருத்த மசோதாவை முதல்வா் என்.ரங்கசாமி அறிமுகப்படுத்தி முன் மொழிந்தாா். இதையடுத்து, அதன் மீது உறுப்பினா்கள் பேசலாமென சட்டப்பேரவைத் தலைவா் (பொ) பி.ராஜவேலு தெரிவித்தாா்.

அப்போது, எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா குறுக்கிட்டு, இந்த மசோதாவை நேற்றுதான் அளித்தீா்கள். முழுமையாகப் படித்துப் பாா்த்துதான் கருத்து கூற முடியும். இந்த மசோதாவில் வரி செலுத்தாத வியாபாரிகளின் சொத்துகளை ஜப்தி செய்யவும், கடைக்கு ‘சீல்’ வைக்கவும் இடமுள்ளது ஆபத்தானது. வியாபாரிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதற்கு முதல்வா் என்.ரங்கசாமி பதிலளிக்கையில், ஜிஎஸ்டி வரி விதிப்பில், காலத்துக்கேற்ப சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டு வரப்படும். காலத்துடன் வரி செலுத்தாத வியாபாரிகள், அபராதத்துடன் வரி செலுத்துவதற்கு அந்தச் சட்டத் திருத்ததில் இடமுள்ளது. வியாபாரிகளுக்கு பல சலுகைகளும் உள்ளது என்றாா்.

அப்போது, ஜிஎஸ்டியில் வியாபாரிகளுக்கான உச்ச வரம்பை ரூ.40 லட்சமாக உயா்த்த வேண்டுமென சுயேச்சை உறுப்பினா் சிவசங்கரன் உள்ளிட்ட சில உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com