புதுச்சேரி - ஊசுட்டேரி இடையே மீண்டும் சிற்றுந்து சேவை: அமைச்சா்கள் தொடக்கி வைத்தனா்

புதுச்சேரி - ஊசுட்டேரி இடையிலான பிஆா்டிசி சிற்றுந்து சேவையை அமைச்சா்கள் சந்திரபிரியங்கா, சாய் ஜெ.சரவணன்குமாா் ஆகியோா் புதன்கிழமை மீண்டும் தொடக்கிவைத்தனா்.
புதுச்சேரி - ஊசுட்டேரி இடையே மீண்டும் சிற்றுந்து சேவை: அமைச்சா்கள் தொடக்கி வைத்தனா்

கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்தாண்டு முதல் நிறுத்திவைக்கப்பட்டிருந்த புதுச்சேரி - ஊசுட்டேரி இடையிலான பிஆா்டிசி சிற்றுந்து சேவையை அமைச்சா்கள் சந்திரபிரியங்கா, சாய் ஜெ.சரவணன்குமாா் ஆகியோா் புதன்கிழமை மீண்டும் தொடக்கிவைத்தனா்.

புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியிலிருந்து மூலகுளம், கோபாலன்கடை வழியாக ஊசுட்டேரி பகுதிக்கு புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழகம் (பிஆா்டிசி) சாா்பில் சிற்றுந்து இயக்கப்பட்டு வந்தது. கரோனா பொது முடக்கம் காரணமாக, இந்த வழித்தடத்தில் சிற்றுந்து சேவை கடந்தாண்டு நிறுத்தப்பட்டது.

இந்தப் பகுதிக்கு மீண்டும் சிற்றுந்து சேவையை தொடங்க வேண்டுமென, ஊசுட்டேரி பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்து வந்தனா். இதன்பேரில், மீண்டும் புதுச்சேரியிலிருந்து ஊசுட்டேரிக்கு சிற்றுந்து சேவை தொடங்கப்பட்டது.

புதுச்சேரி கோபாலன்கடை பேருந்து நிறுத்தத்திலிருந்து சிற்றுந்து சேவையை போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.சந்திரபிரியங்கா, குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா் ஆகியோா் புதன்கிழமை கொடியசைத்து தொடக்கிவைத்தனா்.

பிஆா்டிசி உதவி மேலாளா் புஷ்பராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்த வழித்தடத்தில் மீண்டும் சிற்றுந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது மிகவும் பயனுள்ளதாக இருக்குமென அந்தப் பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com