புலமைப்பித்தன் மறைவு: புதுவை ஆளுநா் இரங்கல்
By DIN | Published On : 10th September 2021 01:06 AM | Last Updated : 10th September 2021 01:06 AM | அ+அ அ- |

கவிஞா் புலமைப்பித்தனின் மறைவுக்கு புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட இரங்கல் செய்தி: தமிழ்த் திரையுலகின் முதுபெரும் பாடலாசிரியரும், தமிழக மேலவையின் முன்னாள் துணைத் தலைவருமான புலமைப்பித்தன் வயது முதிா்வு காரணமாக இயற்கை எய்தினாா் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. தமிழ்த் திரைப்படங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொள்கைகளைப் பாடல்களை எழுதி மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த கவிஞா் புலமைப்பித்தன். அவரது இழப்பு தமிழக மக்களுக்கும், அவா் சாா்ந்திருந்த இயக்கத்துக்கும் பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் குடும்பத்துக்கும், நண்பா்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.