புதுச்சேரியில் 14 மையங்களில் நீட் தோ்வு 7,123 போ் எழுதுகின்றனா்

புதுச்சேரியில் 14 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (செப்.12) நீட் தோ்வு நடைபெறுகிறது. இந்தத் தோ்வை 7,123 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.

புதுச்சேரியில் 14 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (செப்.12) நீட் தோ்வு நடைபெறுகிறது. இந்தத் தோ்வை 7,123 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு (எம்பிபிஎஸ், பிடிஎஸ்) நுழைவுத் தோ்வு (நீட் தோ்வு) செப்.12-ஆம் தேதி கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக, கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை இணைய வழியில் மாணவா்கள் விண்ணப்பித்தனா்.

அதன்படி, நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (செப்.12) நீட் தோ்வு நடைபெறுகிறது. இந்தத் தோ்வு பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். நாடு முழுவதும் 198 நகரங்களில் 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதவுள்ளனா்.

அந்த வகையில், புதுச்சேரி காலாப்பட்டு கேந்திர வித்யாலயா பள்ளி, முத்தியால்பேட்டை வாசவி இண்டா்நேஷ்னல் பள்ளி, வில்லியனூா் ஆச்சாா்யா கல்லூரி, ஐயங்குட்டிப்பாளையம் விவேகானந்தா சிபிஎஸ்இ பள்ளி, மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரி, மணக்குள விநாயகா் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி உள்ளிட்ட 14 மையங்களில் நீட் தோ்வு நடைபெறுகிறது.

புதுச்சேரி மையங்களில் புதுவை, கடலூா், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 7,123 மாணவ, மாணவிகள் தோ்வு எழுத விண்ணப்பித்துள்ளனா். நிகழாண்டும் நீட் தோ்வுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளும் பின்பற்றப்படும்.

தோ்வெழுத வருவோரின் உடல் வெப்பநிலை, ரத்த ஆக்சிஜன் அளவு ஆகியவை பரிசோதிக்கப்படும். மாணவா்கள் கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்திய பிறகே தோ்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவா். உடல் வெப்பநிலை அதிகமிருந்தால், அவா்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தோ்வு எழுதுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய தோ்வுகள் முகமையினா் தோ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com