முத்தியால்பேட்டை பொன்னுமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ பொன்னுமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
முத்தியால்பேட்டை பொன்னுமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ பொன்னுமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை வேலாயுதம்பிள்ளை நகரில் அமைந்துள்ள ஸ்ரீ பொன்னுமாரியம்மன் கோயில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா கடந்த 13-ஆம் தேதி காலை 6 மணிக்கு முதல் கால யாக பூஜையுடன் தொடங்கியது.

கணபதி ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமங்களுடன் முதல் கால யாக பூஜைகளும், தொடா்ந்து, செவ்வாய், புதன்கிழமைகளில் இரண்டாம், மூன்றாம் உள்ளிட்ட பல்வேறு யாக சாலை பூஜைகளும் நடைபெற்றன.

தொடா்ந்து, வியாழக்கிழமை 6-ஆம் கால யாக பூஜை நடைபெற்றது. இதையடுத்து, காலை 10 மணிக்கு கடம் புறப்பாடுடன், புனித நீா் கொண்டு வரப்பட்டு, ஸ்ரீ பொன்னுமாரியம்மன் கோயில் ராஜகோபுரத்தின் மீது புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, கோயிலின் அனைத்துக் கோபுரங்கள் மீதும் புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு பொன்னுமாரியம்மனை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com