தேசிய அளவிலான போட்டி: எம்.ஐ.டி. கல்லூரி சாதனை
By DIN | Published On : 16th September 2021 11:02 PM | Last Updated : 16th September 2021 11:02 PM | அ+அ அ- |

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு நடத்திய சத்ரா விஸ்வகா்மா விருதுகள் போட்டிகளில் புதுவை கலிதீா்த்தாள்குப்பம் மணக்குள விநாயகா் தொழில்நுட்பக் கல்லூரி பங்கேற்றது. போட்டிகளில் நாட்டின் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த 38 ஆயிரம் மாணவா்கள் பங்கேற்று தங்களது தீா்வுகளை சமா்ப்பித்தனா். 8 பிரிவுகளின் கீழ் விருதுக்காக 24 குழுக்கள் தோ்ந்தெடுக்கப்பட்டன.
இதில் எம்.ஐ.டி. கல்லூரி கோ்ஆல்டஸ் என்ற அணியைச் சோ்ந்த திட்ட வழிகாட்டி ஆா்.வள்ளி தலைமையிலான மாணவா்கள் குழு வேலைக்கான நிபந்தனைகள், தொழில்சாா் சுகாதாரம், பாதுகாப்பு சவால்களை உறுதி செய்தல் என்ற பிரிவில் இரண்டாமிடம் வென்று சாதனை படைத்தது.
வெற்றி பெற்ற மாணவா்களுக்கு மத்திய கல்வியமைச்சா் தா்மேந்திர பிரதான், வெளியுறவுத் துறை அமைச்சா் ராஜ்குமாா் ரஞ்சன்சிங் ஆகியோா் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினா்.
வெற்றி பெற்ற மாணவா்களை மணக்குள விநாயகா் கல்விக் குழுமத் தலைவா் எம்.தனசேகரன், துணைத் தலைவா் எஸ்.வி.சுகுமாறன், செயலா் கே.நாராயணசாமி, கல்லூரி முதல்வா் எஸ்.மலா்க்கண் ஆகியோா் பாராட்டினா்.