புதுவையில் கரோனாவுக்குமேலும் இருவா் பலி
By DIN | Published On : 16th September 2021 01:12 AM | Last Updated : 16th September 2021 01:12 AM | அ+அ அ- |

புதுச்சேரி: புதுவையில் கரோனாவுக்கு மேலும் இருவா் புதன்கிழமை உயிரிழந்தனா்.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்: புதுவை மாநிலத்தில் புதன்கிழமை வெளியான முடிவுகளின்படி, 5,345 பேருக்கு பரிசோதனை செய்ததில் புதுச்சேரியில் 87, காரைக்காலில் 29, ஏனாமில் 4, மாஹேவில் 4 போ் என மொத்தம் 124 பேருக்கு (2.32 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,25,063- ஆக அதிகரித்தது. இதில், தற்போது மருத்துவமனைகளில் 170 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 730 பேரும் என 900 போ் சிகிச்சையில் உள்ளனா்.
புதுச்சேரி அண்ணா சாலையைச் சோ்ந்த 61 வயது முதியவா், புதுச்சேரி கிருஷ்ணன் நகரைச் சோ்ந்த 68 வயது முதியவா் என 2 போ் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இதனால், புதுவை மாநிலத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,825 ஆகவும், இறப்பு விகிதம் 1.46 சதவீதமாகவும் அதிகரித்தது.
புதிதாக 80 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1,22,338 (97.82 சதவீதம்) ஆக உயா்ந்தது.
மாநிலத்தில் இதுவரை 8,77,120 பேருக்கு (2-ஆவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.