புதுவை ஆளுநருடன், முதல்வர் ரங்கசாமி திடீர் சந்திப்பு: மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் குறித்து ஆலோசனை?

புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை முதல்வர் ரங்கசாமி இன்று காலை சந்தித்தார்.
புதுவை ஆளுநருடன், முதல்வர் ரங்கசாமி சந்திப்பு.
புதுவை ஆளுநருடன், முதல்வர் ரங்கசாமி சந்திப்பு.

புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை முதல்வர் ரங்கசாமி இன்று காலை சந்தித்தார்.

புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 4ஆம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி பெறப்பட்டு வருகிறது. செப்டம்பர் 22 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாளாகும். மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பெரும்பான்மை பலமுள்ள ஆளும் தே.ஜ. கூட்டணி வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. இதனால் அந்தக் கூட்டணியைச் சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக இடையே, போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று இழுபறியில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை 10 மணிக்கு முதல்வர் ரங்கசாமி, ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் சந்தித்துப் பேசினார். பிறகு 10.30 மணிக்கு முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவைக்கு திரும்பினார். அலுவல் ரீதியான சந்திப்பு என்று கூறப்பட்டது. எனினும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் தொடர்பாக பேசி இருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து தேஜ கூட்டணி வட்டாரத்தில் கேட்டபோது, மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுவதற்கு, கூட்டணியில் பாஜக மேலிடத் தலைவர்கள் முதல்வருடம் பேசி உள்ளனர்.

வேட்பாளர் யார் என்பது குறித்து இன்று மாலைக்குள் முடிவு வெளியாகும். நாளை வேட்பு மனுத்தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது என்றனர். இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுவது யார் என்று, முடிவு தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுவை அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்த ஆலோசனை

இதனிடையே புதுச்சேரியில் ஆளுநர்-முதல்வர் சந்திப்பின் போது, புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனைகளை உலகத் தரத்திலான சிகிச்சை மையமாக மேம்படுத்துவது தொடர்பாக முதல்வர் ரங்கசாமியுடன் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆலோசனை நடத்தியதாக ஆளுநர் அலுவலக சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com