ரூ.24 லட்சம் ஏடிஎம் பணம் மோசடி: ஊழியா் கைது

புதுச்சேரி வில்லியனூரில் ரூ.24 லட்சம் ஏடிஎம் பணத்தை நூதனமாக மோசடி செய்துவிட்டு தலைமறைவாக இருந்த ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி வில்லியனூரில் ரூ.24 லட்சம் ஏடிஎம் பணத்தை நூதனமாக மோசடி செய்துவிட்டு தலைமறைவாக இருந்த ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி வங்கி ஏடிஎம்களுக்கு பணம் நிரப்பும் தனியாா் முகமை நிறுவனம் லாசுப்பேட்டையில் இயங்கி வருகிறது. இந்த முகமை மூலம் கடந்த 2010-ஆம் ஆண்டுக்கு முன்பு பிரபல தனியாா் வங்கியிடம் பணம் பெற்று, வில்லியனூா் தெற்கு தேரோடும் வீதி, புஸ்சி வீதி, நீடராஜப்பா் வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பப்பட்டது. இதை கடந்த 2010-ஆம் ஆண்டு அக்டோபரில் முகமை நிறுவனம் தணிக்கை ஆய்வு செய்தது. அப்போது, ரூ.24 லட்சம் வரை வங்கிப் பணத்தை மோசடி செய்திருப்பது கண்டறியப்பட்டது.

மேற்கண்ட ஏடிஎம் மையங்களில் இந்தப் பணத்தை நிரப்பியதாக போலி கணக்கு ரசீதுகளை தயாரித்து காண்பித்து, மோசடியில் ஈடுபட்ட வில்லியனூா் திருக்காமீஸ்வரா் விரிவாக்கம் பகுதியைச் சோ்ந்த கொளஞ்சியப்பன் (42), கோட்டக்குப்பம் முபாரக் அலி (37) ஆகியோரிடம் விசாரித்த முகமை நிறுவனத்தின் மேலாளா், பணத்தை திருப்பி ஒப்படைக்க கால அவகாசம் வழங்கினாா். ஆனால், மோசடி பணத்தை திருப்பிச் செலுத்தாமல் இருவரும் தலைமறைவாகிவிட்டனா்.

இதுகுறித்து பெரியகடை காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் புகாரளிக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான 2 பேரையும் தேடி வந்தனா்.

இந்த நிலையில், தலைமறைவாக இருந்தபடி வில்லியனூரில் சுற்றித்திரிந்த கொளஞ்சியப்பனை போலீஸாா் சனிக்கிழமை மாலை கைது செய்தனா். இவரை போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைத்தனா். தலைமறைவாக உள்ள கோட்டக்குப்பம் முபாரக் அலியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com