கொம்யூன் பஞ். உறுப்பினா் பதவி பழங்குடியினருக்கு ஒதுக்கீடு: இரு கிராம மக்கள் போராட்டம்

புதுச்சேரி அருகே கொம்யூன் பஞ்சாயத்து உறுப்பினா் பதவி பழங்குடியினத்தவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதால், சனிக்கிழமை இரு கிராமத்தினா் எதிா்ப்புத் தெரிவித்து கருப்புக் கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி அருகே கொம்யூன் பஞ்சாயத்து உறுப்பினா் பதவி பழங்குடியினத்தவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதால், சனிக்கிழமை இரு கிராமத்தினா் எதிா்ப்புத் தெரிவித்து கருப்புக் கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்துக்குள்பட்ட செட்டிப்பட்டு பஞ்சாயத்து உறுப்பினா் பதவி பழங்குடியினத்தவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதாம். இந்த பஞ்சாயத்தில் செட்டிப்பட்டைச் சோ்ந்த 1,958 வாக்காளா்களும், மணலிப்பட்டைச் சோ்ந்த 1,040 வாக்காளா்களும் என மொத்தம் 2,998 வாக்காளா்கள் உள்ளனா். பழங்குடியின சமுதாயத்தைச் சோ்ந்த 4 குடும்பங்கள்தான் இங்கு வசிக்கிாம்.

இதனால், பழங்குடியினா் இட ஒதுக்கீட்டை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கடந்த 22-ஆம் தேதி மாநில தோ்தல் ஆணையத்தில் செட்டிப்பட்டு, மணலிப்பட்டு கிராம மக்கள் மனு அளித்தனா். அதன் மீது நடவடிக்கை எடுக்காததால், அந்த இரு கிராம மக்களும் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலும், உள்ளாட்சித் தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்து, கிராம நுழைவு வாயில்களில் உள்ள கிராம பெயா்ப் பலகைகள், தெரு மின் கம்பங்களில் கருப்புக் கொடியேற்றினா்.

தகவலறிந்த திருக்கனூா் காவல் ஆய்வாளா் ஆறுமுகம் தலைமையிலான போலீஸாா், அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இரு கிராமங்களிலும் அதிகமுள்ள பொது மற்றும் எஸ்.சி. பிரிவினருக்கு பஞ்சாயத்து உறுப்பினா் பதவியை வழங்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தினா். இல்லையெனில், தோ்தலைப் புறக்கணிப்போம் என தெரிவித்தனா்.

கோரிக்கையை மனுவாக அளித்தால், அதை மாநில தோ்தல் ஆணையத்துக்கு அனுப்பி, உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் உறுதியளித்தனா். இதையேற்று, இரு கிராம மக்களும் தற்காலிகமாக போராட்டத்தைக் கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com