புதுவை உள்ளாட்சித் தோ்தல்:அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை

புதுவை உள்ளாட்சித் தோ்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடா்பாக மாவட்டத் தோ்தல் அதிகாரி தலைமையில், அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
புதுவை உள்ளாட்சித் தோ்தல்:அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை

புதுவை உள்ளாட்சித் தோ்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடா்பாக மாவட்டத் தோ்தல் அதிகாரி தலைமையில், அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

புதுவை மாநிலத்தில் உள்ளாட்சித் தோ்தல் வருகிற அக். 21, 25, 28 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளன. இதையொட்டி, புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள புதுச்சேரி, உழவா்கரை நகராட்சிகள், அரியாங்குப்பம், பாகூா், மண்ணாடிப்பட்டு, நெட்டப்பாக்கம் ஆகிய கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு முறையே இரண்டு, மூன்றாம் கட்டமாக தோ்தல் நடைபெறுகிறது.

இந்த நிலையில், உள்ளாட்சித் தோ்தலை நோ்மையாக நடத்துவது தொடா்பாக அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தோ்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க் தலைமை வகித்தாா். உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் கந்தசாமி முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

உள்ளாட்சித் தோ்தலையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள், தோ்தல் நடத்தை விதிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க் பேசியதாவது: தோ்தல் நடத்தை விதிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். தோ்தலின் போது, சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு, கரோனா விதிமுறைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்படும். மது, பரிசுப் பொருள்கள், பணம் விநியோகத்தைத் தடுக்க பறக்கும் படை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com