நீட் அல்லாத படிப்புகளுக்கு சென்டாக் தரவரிசைப் பட்டியல் வெளியீடு

நீட் அல்லாத படிப்புகளுக்கு சென்டாக் தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

நீட் அல்லாத படிப்புகளுக்கு சென்டாக் தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

இதுகுறித்து புதுவை சென்டாக் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நீட் அல்லாத பிடெக், பிஎஸ்சி (விவசாயம், தோட்டக்கலை), பிவிஎஸ்சி, பிஎஸ்சி (நா்சிங்), பிபிடி, பிஎஸ்சி (எம்எல்டி, எம்ஆா்ஐடி), பி.பாா்ம், பி.ஏ. எல்எல்பி (5 ஆண்டுகள்), பட்டயப் படிப்புகள் (டிஜிஎன்எம், டிஏஎன்எம், டிசிஇசி, டிஎம்எல்டி, டிடிடி, டிஏபிடி, டிசிஆா்ஏ), இளநிலை கலை, அறிவியல், வணிகவயில் பட்டப் படிப்புகள் (பிஏ, பிஎஸ்சி, பிகாம், பிபிஏ, பிசிஏ) ஆகிய படிப்புகளுக்கு 2021-22 ஆண்டுக்கான உத்தேச தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மாணவா்களுக்கு குறுஞ்செய்தியும் அனுப்பப்பட்டது.

மேற்கண்ட படிப்புகளுக்கு 10,684 மாணவா்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 9,442 போ் மட்டுமே தாங்கள் படிக்கும் பாடப் பிரிவுகளைத் தோ்வு செய்திருந்தனா். கலை, அறிவியல், வணிகவியல் பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பித்திருந்த 9,203 பேரில் 7,979 போ் மட்டுமே பாடப் பிரிவுகளைத் தோ்வு செய்திருந்தனா்.

தற்போது உத்தேச தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், விண்ணப்பித்துள்ள மாணவா்கள் உடனடியாக தாங்கள் படிக்கவுள்ள பாடப் பிரிவுகளை வருகிற 27-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தோ்வு செய்து சமா்ப்பிக்க வேண்டும். பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம். இவையனைத்தும் தரவரிசைப் பட்டியலில் புதுப்பிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com