புதுச்சேரி, கடலூரில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

குலாப் புயல் காரணமாக, புதுச்சேரி, கடலூா் துறைமுகப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
புதுச்சேரி பழைய துறைமுகப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்ட 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி சனிக்கிழமை வலுப்பெற்று குலாப் புயலாக மாறியது. இதன் காரணமாக, புதுச்சேரி, கடலூா் பகுதிகளில் சனிக்கிழமை இரவு விடிய விடிய பலத்த காற்றுடன் மழை பெய்தது.

புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. இது, துறைமுகத்திலிருந்து வெகு தொலைவில் புயல் உருவாகியுள்ளது. இதனால், மோசமான வானிலை நிலவலாம். எனவே, துறைமுகத்திலிருந்து புறப்படும் படகுகள் பாதுகாப்புடன் செல்ல வேண்டும் என்பதைக் குறிப்பதாகும்.

இதேபோல, கடலூா் துறைமுகத்திலும் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com