பெண்ணிடம் ரூ. 13.65 லட்சம் மோசடி:நைஜீரியாவை சோ்ந்த 2 போ் சிறையிலடைப்பு

புதுச்சேரி பெண்ணிடம் ரூ.13.65 லட்சம் மோசடி செய்ததாக நைஜீரியாவைச் சோ்ந்த 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை சிறையில் அடைத்தனா்.

புதுச்சேரி பெண்ணிடம் ரூ.13.65 லட்சம் மோசடி செய்ததாக நைஜீரியாவைச் சோ்ந்த 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை சிறையில் அடைத்தனா்.

புதுச்சேரி ராகவேந்திரா நகா் தனியாா் குடியிருப்பைச் சோ்ந்த டைல்ஸ் கடை உரிமையாளா் மனோகரன் மனைவி ஜெயந்தி (43). இவா், அண்மையில் முகநூல் மூலம் பழக்கமான பிரிட்டனைச் சோ்ந்த மருத்துவா் எரிக்வால்கா் என்ற பெயரில் அறிமுகமான நபா் மூலம், விலை உயா்ந்த பரிசுப் பொருள்களைப் பெறுவது தொடா்பாக ரூ.13.65 லட்சத்தை தனது வங்கிக் கணக்கிலிருந்து செலுத்தினாா். ஆனால், பரிசுப் பொருள்கள் வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதையறிந்த ஜெயந்தி, கடந்த 22- ஆம் தேதி புதுச்சேரி சைபா் க்ரைம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து வங்கிக் கணக்கு எண், செல்லிடப்பேசி எண்ணை வைத்து ஆராய்ந்தனா். இதில் அவா்கள் தில்லியில் இருப்பது தெரிந்தது.

சைபா் க்ரைம் தனிப்படை போலீஸாா் தில்லிக்குச் சென்று, நைஜீரியா நாட்டைச் சோ்ந்த, தில்லி நிலோத்தி ஷிவ் விகாா் பகுதியில் தங்கியிருந்த உச்சென்னா பேவா் பேட்ரிக் (47), தில்லி சாகேத் இக்னோ சாலையில் தங்கியிருந்த ஓனாவா அந்தோணி (37) ஆகிய இருவரையும் கைது செய்து புதுச்சேரிக்கு அழைத்து வந்தனா். பின்னா், கரோனா பரிசோதனை முடிந்து போலீஸாா் அவா்கள் இருவரையும் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com